என் மலர்
நீங்கள் தேடியது "Car manufacturing"
- இறக்குமதி வரிகளை கணிசமாகக் குறைக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
- டெஸ்லா இந்தியாவில் ஒரு தொழிற்சாலையைத் திறப்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்த்தார்.
எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மின்சார கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.
டெஸ்லா நிறுவனம் நாட்டில் ஷோரூம்களைத் திறந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இந்தியா விரைவில் தனது மின்சார வாகன (EV) உற்பத்தி கொள்கையின் கீழ் கார் உற்பத்திக்கான விண்ணப்பங்களை வரவேற்கும்.
ஐரோப்பிய நிறுவனங்களான மெர்சிடிஸ் பென்ஸ், ஸ்கோடா-வோக்ஸ்வாகன் (VW), மற்றும் தென் கொரிய நிறுவனங்களான ஹூண்டாய் மற்றும் கியா ஆகியவை இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளன.
நாட்டின் மின்சார கார் உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக இறக்குமதி வரிகளை கணிசமாகக் குறைக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், மின்சார வாகன உற்பத்தியில் 486 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் நிறுவனங்கள், தற்போதைய 70 சதவீதத்திலிருந்து குறைக்கப்பட்டு 15 சதவீத வரி விகிதத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில், டெஸ்லா இந்தியாவில் ஒரு தொழிற்சாலையைத் திறப்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்த்து குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கார் விற்பனை அதிக அளவில் நடந்து வந்த நிலையில் இந்த மே மாதம் கார் விற்பனை மந்த நிலையை எட்டியுள்ளது.
- ஒரு லட்சம் யூனிட்கள் கூட தற்போது விற்பனை செய்யப்படாமல் தேங்கியிருப்பது வழக்கத்துக்கு மாறாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கார் விற்பனை அதிக அளவில் நடந்து வந்த நிலையில் இந்த மே மாதம் கார் விற்பனை மந்த நிலையை எட்டியுள்ளது. இதனால் கடந்த காலங்களில் அதிக லாபம் ஈட்டி வந்த கார் டீலர்கள், தற்போது சுமார் 4.5 லட்சம் யூனிட் அளவிலான உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனை ஆகாமல் உற்பத்தியாளர்களிடமே தேங்கியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஒரு மாதத்துக்கு 3.5 லட்சம் யூனிட் கார்கள் விற்பனையாகும் அளவிற்கு கார் விற்பனை சந்தை வளர்ந்துள்ள போதிலும் ஒரு லட்சம் யூனிட்கள் கூட தற்போது விற்பனை செய்யப்படாமல் தேங்கியிருப்பது வழக்கத்துக்கு மாறாக பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் விங்கேஷ் குலாட்டி இதுகுறித்து பேசுகையில், உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தாயாராக இருக்கும் கார்கள் 4 லட்சம் யூனிட் அளவிற்கு விற்பனைக்கு செல்வது ஆரோக்கியமான சந்தையை உருவாக்கும்.

ஆனால் தற்போது 1 லட்சம் யூனிட் அளவு கூட விற்பானையாகாமல் தேங்கி நிற்கிறது. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட கார் யூனிட்களை கூடுதலாக பல மாதங்களாக இருப்பில் வைத்திருக்கும் செலவு அதிகரிப்பது கார் வாங்குபவர்களுக்கு டீலர்களுக்கும் நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்த அசாதாரண நிலையை சரி செய்ய உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை குறைத்துக்கொள்வதே தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.






