என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் கார் உற்பத்தி செய்ய டெஸ்லா நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை - மத்திய அமைச்சர் குமாரசாமி
    X

    இந்தியாவில் கார் உற்பத்தி செய்ய டெஸ்லா நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை - மத்திய அமைச்சர் குமாரசாமி

    • இறக்குமதி வரிகளை கணிசமாகக் குறைக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
    • டெஸ்லா இந்தியாவில் ஒரு தொழிற்சாலையைத் திறப்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்த்தார்.

    எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மின்சார கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.

    டெஸ்லா நிறுவனம் நாட்டில் ஷோரூம்களைத் திறந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

    இந்தியா விரைவில் தனது மின்சார வாகன (EV) உற்பத்தி கொள்கையின் கீழ் கார் உற்பத்திக்கான விண்ணப்பங்களை வரவேற்கும்.

    ஐரோப்பிய நிறுவனங்களான மெர்சிடிஸ் பென்ஸ், ஸ்கோடா-வோக்ஸ்வாகன் (VW), மற்றும் தென் கொரிய நிறுவனங்களான ஹூண்டாய் மற்றும் கியா ஆகியவை இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளன.

    நாட்டின் மின்சார கார் உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக இறக்குமதி வரிகளை கணிசமாகக் குறைக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ், மின்சார வாகன உற்பத்தியில் 486 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் நிறுவனங்கள், தற்போதைய 70 சதவீதத்திலிருந்து குறைக்கப்பட்டு 15 சதவீத வரி விகிதத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பிப்ரவரியில், டெஸ்லா இந்தியாவில் ஒரு தொழிற்சாலையைத் திறப்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்த்து குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×