என் மலர்
நீங்கள் தேடியது "Anand Mahindra"
இந்திய மக்கள் பயணங்களில் சந்திக்கும் பிரச்சனையை சரி செய்ய ஆனந்த் மஹிந்திராவுக்கு 11 வயது சிறுமி அட்வைஸ் கொடுத்திருக்கிறார். #AnandMahindra
மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா 11 வயது சிறுமிக்கு ட்விட்டரில் தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பதிவில் 11 வயது சிறுமி தனக்கு எழுதியிருந்த கடிதத்தின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.
இந்திய சாலைகளில் பயணிக்கும் போது அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையை சரி செய்ய மிக எளிய வழிமுறையை மும்பையில் வசிக்கும் 11 வயது சிறுமி ஆனந்த் மஹிந்திராவுக்கு தெரிவித்திருக்கிறார். சாலைகளில் செல்லும் வாகனங்களில் ஹாரன் எழுப்பப்படும் போது பெரும்பாலான நேரங்களில் நம்மில் பலரும் பாதிக்கப்பட்டிருப்போம்.

இதற்கு தீர்வு காண 11 வயதான மஹிகா மிஸ்ரா ஆனந்த் மஹிந்திராவுக்கு கோரிக்கையாக வைத்திருந்தார். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளில் பலர் தேவையற்ற நிலைகளில் ஹாரன் எழுப்புவதை தடுக்கும் நோக்கில், பத்து நிமிடங்களில் ஐந்து முறை மட்டும் ஹாரன் வேலை செய்யும் படி மாற்றம் கொண்டு வரவேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
இத்துடன் ஹாரன் ஒலிக்கும் நேரம் வெறும் மூன்று நொடிகள் மட்டுமே இருக்க வேண்டும் என மிஸ்ரா தெரிவித்திருக்கிறார். இதுபோன்று மாறும் போது ஹாரன் மூலம் ஏற்படும் ஒலி மாசு பெருமளவு குறைக்கப்படும் என அவர் தனது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
சிறுமியின் கடித்ததை மின்னஞ்சலில் பார்த்த ஆனந்த் மஹிந்திரா கடிதத்தின் புகைப்படத்துடன், சிறுமியின் செயலை பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். நாள் முழுக்க உழைத்து திரும்பும் போது, இதுபோன்ற மின்னஞ்சலை பார்க்கும் போது களைப்பு முழுமையாக நீங்கிவிடுகிறது. இந்த உலகம் சிறப்பாகவும், அமைதியாகவும் இருக்க நினைக்கும் இச்சிறுமி போன்ற மக்களுக்காக நான் பணியாற்றுகிறேன் என்று எனக்கு தெரியும் என சிறுமியின் செயல் பற்றி தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். #AnandMahindra

At the end of a tiring day, when you see something like this in the mail..the weariness vanishes...I know I’m working for people like her, who want a better—and quieter world! 😊 pic.twitter.com/lXsGLcrqlf
— anand mahindra (@anandmahindra) April 3, 2019
சிறுமியின் கடித்ததை மின்னஞ்சலில் பார்த்த ஆனந்த் மஹிந்திரா கடிதத்தின் புகைப்படத்துடன், சிறுமியின் செயலை பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். நாள் முழுக்க உழைத்து திரும்பும் போது, இதுபோன்ற மின்னஞ்சலை பார்க்கும் போது களைப்பு முழுமையாக நீங்கிவிடுகிறது. இந்த உலகம் சிறப்பாகவும், அமைதியாகவும் இருக்க நினைக்கும் இச்சிறுமி போன்ற மக்களுக்காக நான் பணியாற்றுகிறேன் என்று எனக்கு தெரியும் என சிறுமியின் செயல் பற்றி தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். #AnandMahindra
கட்டிலில் இருந்து கீழே இறங்கி விளையாட கால் உயரம் எட்டாத நிலையில், ஒரு வயது கூட நிரம்பாத குழந்தை செய்த அசாத்திய காரியத்தை கண்டு வியந்த பிரபல தொழிலதிபர் அந்த குழந்தைக்கு வேலைவாய்ப்பை இப்போதே உறுதிப்படுத்தியுள்ளார்.
ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் பல நேரங்களில் அதிகமாக வதந்திகள் பரவினாலும், சில வேளைகளில் வியத்தகு சம்பவங்களும் பதிவிடப்படுகின்றன. அவ்வகையில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ நமது பார்வையை தற்போது கவர்ந்துள்ளது.
யாரும் இல்லாத தனி அறையில் கட்டிலில் அமர்ந்திருக்கும் சுமார் ஒரு வயது குழந்தை கீழே இறங்கி விளையாட நினைக்கிறது. இதற்காக கட்டிலில் இருந்து காலை வெளியே நீட்டி இறங்க முயற்சிக்கையில், அந்த பிஞ்சு பாதம் தரையை தொட முடியாமல் தவிக்கிறது.

ஒரு காரியத்தை அடைய நமது உடல் அமைப்புகள் ஒத்து வராத போது அதற்கு ஏற்ப இட்டுக்கட்டி நினைத்ததை முடித்துக் கொள்ள பெரியவர்களாகிய நாம் சில நேரங்களில் சரியான முடிவெடுக்க தெரியாமல் திணறுவதுண்டு. ஆனால் இந்தச் சுட்டிக் குட்டியின் மூளை சில வினாடிகளில் மின்னல் வேகத்தில் செயலாற்றியது.
கட்டில் மற்றும் தரைக்கான இடைவெளியை குறைக்க அங்கிருந்த தலையணைகளை தனது பலம் கொண்டு மட்டும் இழுத்து கீழே போட்ட அந்த குழந்தை தனது விளையாட்டுத் தோழனான பொம்மையையும் சேகரித்துக் கொண்டு அடிப்படாமல் கட்டிலில் இருந்து தலையணையின் மேல் விழும் வீடியோ காட்சி தான் நம்மை கவர்ந்தது. இந்த வீடியோ நிச்சயம் உங்களையும் கவரும்.

ஏனெனில் இந்த வீடியோ கண்டு வியப்படைந்து போன மஹிந்திரா தலைவர் ஆனந்த் மஹிந்திரா, "இந்த குழந்தை கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வந்தால், அதற்கு எங்கள் நிறுவனத்தில் நிச்சயமாக நல்ல வேலை காத்திருக்கிறது" என தனது ட்விட்டர் பக்கத்தில் இப்போதே உறுதிமொழி அளித்துள்ளார்.

ட்விட்டரில் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டிருக்கும் வீடியோவை கீழே காணலாம்..,
சமீபத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிய ஷு டாக்டர் நர்ஸி ராமின், மேலாண்மை திறனை கண்டு வியந்த ஆனந்த் மஹிந்திரா புது கடையை அமைத்து கொடுத்துள்ளார். #AnandMahindra
சண்டிகர்:
சமீபத்தில் அரியானாவில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரின் புகைப்படம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவிற்கும் இந்த படம் வந்திருந்தது. இந்த படத்தை பார்த்த ஆனந்த் மஹிந்திரா ஆச்சரியத்தில் மூழ்கினார். காரணம், அந்த புகைப்படத்தில் தொழிலாளி அவரின் கடையில் எழுதியிருந்த வசனம்.
‘செருப்புகளின் காயங்களை போக்கும் மருத்துவமனை .. டாக்டர் நர்ஸி ராம்’. இதை பார்த்த ஆனந்த் இந்தப் படத்தில் இருக்கும் தொழிலாளி இந்திய மேலாண்மை நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பாடம் நடத்துவதற்கு தகுதியானவர் என்றும் குறிப்பிட்டு, அவரின் முழு விவரம் குறித்து யாருக்கேனும் தெரிந்திருந்தால் தன்னை தொடர்புக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.

சில மாத தேடலுக்கு பின்னர் செருப்பு தொழிலாளி நரசிம்மனை கண்டுப்பிடித்து நடந்த எல்லாவற்றையும் கூறியுள்ளனர். மேலும், அவரை ஆனந்த் மகிந்த்ரா வேலைக்கு அழைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.பின்பு அவர்கள் நரசிம்மனிடம் பணத்தொகையை பரிசாக வழங்கியுள்ளனர். ஆனால், நரசிம்மனோ உழைக்கும் வருமானமே போதும் வேண்டுமென்றால் என்னுடையை கடையை சரிசெய்து தாருங்கள் என்று வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு புதிய பணியிடத்தை பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, அந்த பணியிடத்தின் வடிவமைப்பை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவியதற்காக பலரும் ஆனந்த் மஹிந்திராவுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.