என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் முதல் ஷோரூமை திறந்த டெஸ்லா நிறுவனம் - எலான் மஸ்க்கிற்கு ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து
    X

    இந்தியாவில் முதல் ஷோரூமை திறந்த டெஸ்லா நிறுவனம் - எலான் மஸ்க்கிற்கு ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து

    • டெஸ்லா மாடல் Y கார்கள் 61 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
    • மும்பையில் டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூமை முதலமைச்சர் பட்னாவிஸ் திறந்து வைத்தார்.

    உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது.

    மும்பை மேற்கு குர்லா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூமை இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஷோரூமின் ஒருமாத வாடகை 35 லட்சம் என்று கூறப்படுகிறது.

    இந்த ஷோரூமில் டெஸ்லா மாடல் Y கார்கள் 61 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

    இந்நிலையில், டெஸ்லா ஷோரூம் இந்தியாவில் திறக்கப்பட்டதற்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா எலான் மஸ்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவரது பதிவில், எலான் மஸ்க்கையும் அவரது டெஸ்லா நிறுவனத்தையும் இந்தியாவிற்கு வரவேற்கிறேன். உலகின் மிகப்பெரிய மின்சார வாகன வாய்ப்புகளில் ஒன்று இப்போது மிகவும் உற்சாகமாகிவிட்டது. போட்டி புதுமைகளை உருவாக்குகிறது. மேலும் நாம் நிறைய தூரம் போகவேண்டியுள்ளது. சார்ஜிங் நிலையத்தில் உங்கள் கார்களை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×