search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலீட்டாளர்கள் மாநாட்டில் கோட் சூட் அணிந்தது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
    X

    முதலீட்டாளர்கள் மாநாட்டில் கோட் சூட் அணிந்தது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

    • தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பது வழக்கம்.
    • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்-சூட் அணிந்து பங்கேற்றார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பது வழக்கம். கோட்-சூட் போடுவது கிடையாது.

    ஆனால் இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்-சூட் அணிந்து பங்கேற்றார்.

    இதுபற்றி அவர் மாநாட்டில் பேசும்போது குறிப்பிட்டதாவது:-

    வெளிநாடுகளுக்கு போகும்போதுதான் நான் 'சூட்' போடுவது வழக்கம். ஆனால் இங்கே எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்ட காரணத்தால், இங்கே நான் கோட்-சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக உள்ளது.

    இன்று காலையில் இருந்து சென்னையில் மழை பெய்கிறது. நான் இங்கே வந்தவுடன் முதலீடும் மழையாக பெய்யும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×