search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "wishes"

  • எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து.
  • பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி.

  தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

  இந்நிலையில், தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!

  பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே…. தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • கல் உடைப்பவர் முதல் கணினியில் வேலை செய்பவர் வரையில் அனை வருமே உழைப்பாளர்கள் தான்.
  • தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம், மே தினம், சர்வதேச தொழிலாளர் தினம் என்று இதை உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம்.

  நெல்லை:

  தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  கல் உடைப்பவர் முதல் கணினியில் வேலை செய்பவர் வரையில் அனை வருமே உழைப்பாளர்கள் தான். உலகம் முழுவதும், இவர்களின் தினசரி 8 மணி நேர வேலையை உறுதிப் படுத்திய வரலாற்று சிறப்புமிக்க நாள்தான் மே1

  தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம், மே தினம், சர்வதேச தொழி லாளர் தினம் என்று இதை உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். உழைப்பே உயர்வு என்பது நம்முடைய பொன்மொழி. வெற்றியை தேடி உழைப்ப வர்கள் மட்டுமே தங்களு டைய வாழ்க்கையில் அந்த வெற்றியைப் பெற முடியும்.

  இன்று உயர்ந்த நிலையில் இருக்கக்கூடிய அனை வருமே கடுமையாக உழைத்த வர்கள்தான். அவ ர்களின் அந்த உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான். அவர்கள் பெற்றுள்ள வெற்றி. உழைக் காமல் வரக்கூடிய உயர்வும், செல்வமும் ஒருபோதும் நிலைக்காது.

  உழைக்கக்கூடிய மக்க ளால் உயர்ந்துள்ள நாடு நம் இந்தியா.

  இந்த பெருமைமிக்க மே தின நன்னாளில், உழைக்கும் மக்கள் அனைவருக்கும் என்னுடைய மே தின நல்வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கின்றேன். உழைக்கும் மக்கள் அனை வரும் தங்கள் வாழ்வில் உயர்வும், மகிழ்ச்சி யும், ஆரோக்கியமும் பெற்று சிறப்படைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டு கின்றேன்.

  இவ்வாறு அதில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

  • தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளராக மீண்டும் சிவபத்பநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • டி.கே.பாண்டியன் தலைமையில் சிவபத்பநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

  கடையம்:

  தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளராக மீண்டும் சிவபத்பநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடையம் ஒன்றிய பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பாக தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் சிவபத்பநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

  இதில் பெரும்பத்து பொன் ஷீலா பரமசிவன், ஏ.பி.நாடானூர் அழகுதுரை, சேர்வைகாரன்பட்டி ரவிச்சந்திரன், தெற்கு மடத்தூர் பிரேமராதா ஜெயம், ஐந்தாங்கட்டளை முப்புடாதி பெரியசாமி, முதலியார்பட்டி அசன் பீவி மைதீன், ரவணசமுத்திரம் உசேன் மற்றும் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி தொழிலதிபர் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதால் சிறப்பான முறையில் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • வழி நெடுகிலும் வரவேற்பு பதாகைகள், கட்சி கொடிகள் கட்டப்பட்டு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

  திருப்பூர் :

  அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், பல்லடம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.லட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர். விந்தியா மற்றும் திருப்பூர் சாய்பாபா நகர் கே.சுப்பிரமணியன்- விஜயலட்சுமி தம்பதியரின் மகன் பிரவீன் ஆகியோர் திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6மணிக்கு பொங்கலூர் அருகே உள்ள சாந்தி மகாலில் திருமண வரவேற்பு விழா நடக்கிறது.

  விழாவில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதால் அவரை சிறப்பான முறையில் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர் வரும் வழி நெடுகிலும் வரவேற்பு பதாகைகள், கட்சி கொடிகள் கட்டப்பட்டு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருமண மண்டபத்திற்கு செல்லும் முன் பகுதியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

  வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, அமைப்புச் செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பல்லடம் முன்னாள் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் உள்பட முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இதனால் வாகன நிறுத்தும் இடத்திற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொங்கலூர் பகுதிக்கு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதால் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி வருகையால் பொங்கலூர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

  தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மே தினம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #MayDay #EdappadiPalaniswami #OPS
  சென்னை:

  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள மே தின வாழ்த்து வருமாறு:-

  உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு உணர்த்தும் வண்ணம் உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த `மே தின’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.  உழைப்பாளர்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு மறுக்கப்பட்டதை எதிர்த்து, ஓயாது போராடிய தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பின் அத்தியாவசியத்தையும், அதன் மேன்மை மிக்க சிறப்பினையும் உலகத்தார்க்கு உணர்த்துகின்ற திருநாளாகவும் `மே தின’ திருநாள் விளங்குகிறது.

  தொழிலாளர்கள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த `மே தின’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறோம்.

  இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #MayDay #EdappadiPalaniswami #OPS
  மலையாள புத்தாண்டு தினமான “விஷு” திருநாள் மக்களின் வாழ்வில் எல்லா நலங்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami #Vishu
  சென்னை:

  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

  மலையாள புத்தாண்டு தினமான “விஷு” திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த “விஷு” திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  புத்தாண்டு தினமான “விஷு” திருநாளன்று, மலையாள மொழி பேசும் மக்கள், அதிகாலை கண் விழித்து அரிசி, காய்கனிகள், கண்ணாடி, கொன்றை மலர்கள், தங்க நாணயங்கள் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்ட விஷுக் கனி கண்டு, மலரும் இப்புத்தாண்டு தங்கள் வாழ்வில் குறைவற்ற செல்வத்தையும், அளவற்ற மகிழ்ச்சியையும் வழங்க வேண்டும் என்று இறைவனைத் தொழுது, உற்றார் உறவினர்களுடன் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு, அறுசுவை விருந்துண்டு உற்சாகமாக “விஷு” தினத்தை கொண்டாடி மகிழ்வார்கள்.  இப்புத்தாண்டு மக்களின் வாழ்வில் எல்லா நலங்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை மலையாள மொழி பேசும் மக்களுக்கு எனது இனிய “விஷு” திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறியுள்ளார். #EdappadiPalaniswami #Vishu

  தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக திகழ தமிழ் புத்தாண்டு உதயமாகட்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். #BanwarilalPurohit #TamilNewYear
  சென்னை:

  தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

  தமிழ் புத்தாண்டு தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நாளாகும். இது நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் மேம்பட்ட நிலையின் அடையாளமாக திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அன்பு, இரக்கம் மற்றும் வீரம் ஒன்றிணைந்த பண்பின் அடையாளமாக விளங்குகின்றனர். நேர்மையும், ஒழுக்கமும் இவர்களை சமாதானம் மற்றும் நிறைவான வளத்தை நோக்கி வழிநடத்தி செல்கின்றன.  மகிழ்ச்சிகரமான தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வருடம் தமிழ்நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக திகழ இந்த நாள் உதயமாகட்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #BanwarilalPurohit #TamilNewYear
  ஹோலி பண்டிகையை முன்னிட்டு, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Holi #PMModi #RamnathKovind
  புதுடெல்லி:

  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், “இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பண்டிகை, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளமையை கொண்டுவரட்டும்” என்று கூறியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், “தீமையை நன்மை தோற்கடித்ததை கொண்டாடும் திருநாள்தான் ஹோலி. இது, மகிழ்ச்சியையும், தோழமையையும் வெளிப்படுத்தும் திருநாள்” என்று கூறியுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகிழ்ச்சி திருவிழா, அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்க்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ செய்தியில், “ஒட்டுமொத்த காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து ஹோலி பண்டிகை வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன். இந்த திருவிழா, உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியால் ஒளிரச் செய்ய இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
  தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ். அழகிரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Vijayakanth #KSAlagiri
  சென்னை:

  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டதற்கும், மேலும் புதியதாக பதவியில் நியமிக்கப்பட்ட மற்ற நிர்வாகிகளுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  புதியதாக பதவி ஏற்றவர்கள் தங்கள் இயக்கத்திற்கு பெருமையையும், புகழையும் சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Vijayakanth #KSAlagiri

  நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Republicday
  சென்னை:

  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

  இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக்காற்றை நமக்கு பெற்றுத்தந்த தேசத் தலைவர்களின் தியாகங்களை என்றென்றும் போற்றி நினைவுகூருவோம். இந்நாளில் மதவாத சக்திகளை ஒடுக்கி, ஜனநாயகத்தைக் காக்க பாசிச, ஊழல், மத்திய-மாநில ஆட்சிகளை வீழ்த்திட புதிய இந்தியாவை உருவாக்கிட இந்நாளில் சபதமேற்போம். இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்:-

  அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஒவ்வொருவரும் முழுமையாக பெறுவதற்கு தடையாக இருப்பது தவறான பொருளாதார கொள்கை, அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லாத மனப்பாங்கு ஆகியவைகளே இந்திய தேசமும் இந்திய திருநாட்டு மக்களும் தொட வேண்டிய சிகரத்தை இன்னும் தொடவிடாமல் தடுக்கும் பெரும் தடைகளாக இருந்து வருகின்றன. இத்தடைகள் எல்லாம் இனி உடையட்டும். வளமும், வளர்ச்சியும் பொருளாதார ஏற்றமும் சமூக நல்லிணக்கமும் தழைத்து சிறந்திட குடியரசு தின நன்னாளில் உறுதி ஏற்போம்.

  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

  இந்திய தேசத்தின் பெருமைமிகு மாண்பும், வரலாறும் தாங்கி நிற்கும் ஒருமைப்பாட்டிற்கும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் அடித்தள ஆணிவேரையும் எந்த சூழலிலும் எவராலும் அசைக்க முடியாது என்பதை இந்தியராகிய நாம் அனைவரும் உறுதியோடு எடுத்துரைக்க வேண்டும். உலகெங்கும் உள்ள இந்தியர்களுக்கும், இந்திய மக்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

  மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-

  நாட்டைப் பிளக்கும் பாசிசம், சமூக அமைதியை சீர்குலைக்கும் சாதியம், நாட்டைச் சுரண்டும் ஊழல் ஆகியவற்றை வேரறுக்கவும் இந்தியர் அனைவரும் ஜனநாயக வழியில் ஒரே அணியில் திரள வேண்டும். குடியரசு தினத்தில் நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் வரையறுத்துள்ள அறநெறிகளை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.

  ‘‘பாரத நாடு பழம்பெரும் நாடு’’ என்றாலும் பழமையும், புதுமையும் சம விகிதத்தில் கலந்து காணப்படுவதால், வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்து இந்திய கலாசாரத்தை கண்டு அதிசயித்து தங்களை அக்கலாசாரத்தில் இணைத்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

  என்.ஆர்.தனபாலன்

  பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தரும் குடியரசு தின வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர். #Republicday