search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மே தினம் - எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து
    X

    மே தினம் - எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மே தினம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #MayDay #EdappadiPalaniswami #OPS
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள மே தின வாழ்த்து வருமாறு:-

    உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு உணர்த்தும் வண்ணம் உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த `மே தின’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.



    உழைப்பாளர்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு மறுக்கப்பட்டதை எதிர்த்து, ஓயாது போராடிய தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பின் அத்தியாவசியத்தையும், அதன் மேன்மை மிக்க சிறப்பினையும் உலகத்தார்க்கு உணர்த்துகின்ற திருநாளாகவும் `மே தின’ திருநாள் விளங்குகிறது.

    தொழிலாளர்கள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த `மே தின’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #MayDay #EdappadiPalaniswami #OPS
    Next Story
    ×