என் மலர்

  நீங்கள் தேடியது "House Wedding Reception"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதால் சிறப்பான முறையில் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • வழி நெடுகிலும் வரவேற்பு பதாகைகள், கட்சி கொடிகள் கட்டப்பட்டு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

  திருப்பூர் :

  அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், பல்லடம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.லட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர். விந்தியா மற்றும் திருப்பூர் சாய்பாபா நகர் கே.சுப்பிரமணியன்- விஜயலட்சுமி தம்பதியரின் மகன் பிரவீன் ஆகியோர் திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6மணிக்கு பொங்கலூர் அருகே உள்ள சாந்தி மகாலில் திருமண வரவேற்பு விழா நடக்கிறது.

  விழாவில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதால் அவரை சிறப்பான முறையில் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர் வரும் வழி நெடுகிலும் வரவேற்பு பதாகைகள், கட்சி கொடிகள் கட்டப்பட்டு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருமண மண்டபத்திற்கு செல்லும் முன் பகுதியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

  வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, அமைப்புச் செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பல்லடம் முன்னாள் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் உள்பட முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இதனால் வாகன நிறுத்தும் இடத்திற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொங்கலூர் பகுதிக்கு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளதால் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி வருகையால் பொங்கலூர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

  ×