காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பாதிப்பு- 1.37 லட்சம் பேருக்கு நிவாரணத் தொகை

ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சில பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.மூன்று கிராமங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அரசின் ரூ.6ஆயிரம் நிவாரண உதவி தொகை வழங்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பாதிப்பு- 1.37 லட்சம் பேருக்கு நிவாரணத் தொகை
Published on

காஞ்சிபுரம்:

மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக குன்றத்தூர் தாலுகாவில் பெரும் பகுதியும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சில பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகாவில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மேவலூர் குப்பம், சிவன் தாங்கல், கச்சிப்பட்டு ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அரசின் ரூ.6ஆயிரம் நிவாரண உதவி தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1.37 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித் தொகை கிடைக்க இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com