search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain damage"

    • ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சில பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
    • மூன்று கிராமங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அரசின் ரூ.6ஆயிரம் நிவாரண உதவி தொகை வழங்கப்பட உள்ளது.

    காஞ்சிபுரம்:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. குறிப்பாக குன்றத்தூர் தாலுகாவில் பெரும் பகுதியும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் சில பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகாவில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மேவலூர் குப்பம், சிவன் தாங்கல், கச்சிப்பட்டு ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அரசின் ரூ.6ஆயிரம் நிவாரண உதவி தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1.37 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித் தொகை கிடைக்க இருக்கிறது.

    • லாரிகள் செல்ல முடியாத நிலையால் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சரக்குடன் சென்ற லாரிகள் சென்னை புறநகர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் லாரிகள் மிக்ஜம் புயலால் சென்னைக்குள் செல்ல முடியால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு பால், ஜவ்வரிசி, இரும்பு தளவாடங்கள், வெல்லம், மஞ்சள், காய்கறி உள்பட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    நாமக்கல்லில் இருந்து முட்டைகள், கறிக்கோழிகள், ஜவுளிகள் உள்பட பல்வேறு பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பல்வேறு சரக்குகள் அனுப்பி வைக்கப்படும்.

    தற்போது சென்னையில் புயல் வெள்ளம் வடியாத நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே மேடான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சரக்குடன் சென்ற லாரிகள் சென்னை புறநகர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதனால் சென்னை உள்பகுதிகளுக்குள் லாரிகள் செல்ல முடியாத நிலையால் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் லாரி போக்குவரத்து முடங்கி உள்ளதால் லாரி உரிமையாளர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    அதன்படி ஒரு லாரிக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் லாரிகளுக்கும், ஒரு நாளைக்கு ரூ.18 கோடி வீதம் 4 நாட்களில் மட்டும் 72 கோடிக்கும் மேல் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் லாரிகள் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு கொண்டு செல்லப்படும் காய்கறிகள், முட்டைகள், மளிகை பொருட்கள் உள்பட பல கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களும் தேக்கம் அடைந்துள்ளன.

    லாரி தொழிலை நம்பியுள்ள 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

    இது தவிர நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினசரி 50 லட்சத்திற்கும் அதிகமாக முட்டைகள் லாரிகளில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னைக்குள் லாரிகள் செல்லாததால் இந்த முட்டைகள் கடந்த 4 நாட்களாக நாமக்கல்லில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் முட்டை கோழிப்பண்ணை யாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2.5 கோடி வீதம் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ. 10 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    • கால்வாயில் மழைநீர் சீராக செல்வதற்கு கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
    • தொடர்ந்து தேனாம்பாக்கம் பகுதியில் உள்ள மழை வடிநீர் கால்வாயை கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழை வடிநீர் கால்வாய்களை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மேட்டுத் தெரு சந்திப்பில் அவர் பார்வையிட்டு, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் சந்தைவெளி அம்மன் கோயில் அருகே உள்ள மழை வடிநீர் கால்வாயை பார்வையிட்டு, கால்வாயில் மழைநீர் சீராக செல்வதற்கு கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தை பார்வையிட்டு, மழை காலங்களில் மழை வெள்ளத் தடுப்புப் பணிக்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளை பார்வையிட்டு, சாலை பயன்பாட்டாளர்களுக்கு உதவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தகவல் வாகனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு ஒலிமுகமதுபேட்டை சந்திப்பில் மழைநீர் தேங்காமல் இருக்க சிறு பாலம் அமைக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து தேனாம்பாக்கம் பகுதியில் உள்ள மழை வடிநீர் கால்வாயை கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் பெரியண்ணன், மாநகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் மாநகராட்சி நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மரம் சாய்ந்து சாலை துண்டிப்பு
    • சமையல் செய்யும் போது தீ பரவி கூரை வீடு முழுவதுமாக எரிந்து நாசம்

    ஆரணி:

    ஆரணி டவுன் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்ளான சேவூர் எஸ்.வி.நகரம் முள்ளிபட்டு, இரும்பேடு உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தன.

    மேலும் ஆரணி டவுன் பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளன ஆரணி டவுன் சைதாப்பேட்டை கங்கையம்மன் கோவில் அருகே மரம் வேறோடு சாய்ந்ததால் அந்த பகுதியில் சாலை துண்டிக்கபட்டன.

    அதே போல ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் கூலித் தொழிலாளி சம்பத் கோமதி தம்பதியனரின் கூரை வீடு சமையல் செய்யும் போது விறகு அடுப்பு தீ பரவி கூரை வீடு முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.

    • மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
    • பொன்னமங்கலம் பகுதியில் மழையால் சேதம் அடைந்த 4 வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் தொகுதியில் உரப்பனூர், வாகைக்குளம் கண்மாய்கள் தொடர் மழை காரணமாக நிரம்பின.இதன் காரணமாக தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. மலர் தூவி வரவேற்றார். தொடர்ந்து பொன்னமங்கலம் பகுதியில் மழையால் சேதம் அடைந்த 4 வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே சேதம் ஏற்பட்டுள்ளது. பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளன. இந்த அரசு பயிர் காப்பீடு நிவாரணத்தை முழுமையாக பெற்று தர வேண்டும்.

    எடப்பாடி ஆட்சி காலத்தில் 4 ஆண்டில் 11 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பெற்று தரப்பட்டது. ஒரு ஏக்கருக்கு 7000 ரூபாய் அதிகபட்சமாக அதற்கேற்ற வகையில் நிவாரணம் வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் ஈடுபொருள் மானியமும் வழங்கப்பட்டது.

    தற்போது தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு உரிய மானிய தொகை கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்க தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது மாநில நிர்வாகி சிவசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வெளியில் சென்றிருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த மூளகிரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு. இவர் அப்பகுதியில் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சின்ன பொண்ணு வேலை சம்பந்தமாக வீட்டிலிருந்து வெளியே சென்று இருந்ததார்.

    நேற்று பெய்த கன மழையால் ஓட்டு வீடு இடிந்து சேதம் அடைந்தது. இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த நிலையில் இது குறித்து அனாக்காவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
    • மிருகண்டா அணை நிறம்பியது

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் ஒன்றியம் ஜவ்வாது மலை பகுதியில் பெய்த தொடர் மழையால் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    கலசப்பாக்கம் பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஏரி, குளங்கள் தண்ணீர் நிரம்பி வழிகின்றன.

    இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ள காரணத்தால் கலசபாக்கம் அடுத்த நவாப்பாளையம் அண்ணா நகர் கொல்லக்கொட்டை சேர்ந்த அப்பாசாமி என்பவரின் விவசாய கிணறு கட்டிடம் இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது.

    மேலும் பல்வேறு விவசாய கிணறுகளின் கட்டிடங்கள் மழையால் இடிந்து சரிந்து விழுந்து உள்ளன.

    இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். கிணற்றை சீரமைக்க நிவாரண உதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×