தொடர் மழையால் கிணறுகள் சேதம்

நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல் மிருகண்டா அணை நிறம்பியது
தொடர்  மழையால் கிணற்றின் சுவர் சேதம் அடைந்துள்ளதை படத்தில் காணலாம்.
தொடர் மழையால் கிணற்றின் சுவர் சேதம் அடைந்துள்ளதை படத்தில் காணலாம்.
Published on

திருவண்ணாமலை:

கலசப்பாக்கம் ஒன்றியம் ஜவ்வாது மலை பகுதியில் பெய்த தொடர் மழையால் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

கலசப்பாக்கம் பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஏரி, குளங்கள் தண்ணீர் நிரம்பி வழிகின்றன.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ள காரணத்தால் கலசபாக்கம் அடுத்த நவாப்பாளையம் அண்ணா நகர் கொல்லக்கொட்டை சேர்ந்த அப்பாசாமி என்பவரின் விவசாய கிணறு கட்டிடம் இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது.

மேலும் பல்வேறு விவசாய கிணறுகளின் கட்டிடங்கள் மழையால் இடிந்து சரிந்து விழுந்து உள்ளன.

இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். கிணற்றை சீரமைக்க நிவாரண உதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com