என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூறைக்காற்று மழையால் பாதிப்பு
- மரம் சாய்ந்து சாலை துண்டிப்பு
- சமையல் செய்யும் போது தீ பரவி கூரை வீடு முழுவதுமாக எரிந்து நாசம்
ஆரணி:
ஆரணி டவுன் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்ளான சேவூர் எஸ்.வி.நகரம் முள்ளிபட்டு, இரும்பேடு உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தன.
மேலும் ஆரணி டவுன் பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளன ஆரணி டவுன் சைதாப்பேட்டை கங்கையம்மன் கோவில் அருகே மரம் வேறோடு சாய்ந்ததால் அந்த பகுதியில் சாலை துண்டிக்கபட்டன.
அதே போல ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் கூலித் தொழிலாளி சம்பத் கோமதி தம்பதியனரின் கூரை வீடு சமையல் செய்யும் போது விறகு அடுப்பு தீ பரவி கூரை வீடு முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.
Next Story






