என் மலர்
நீங்கள் தேடியது "Mortality"
- பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் 50.7% பேர் மரணத்தின்போது மருத்துவ கவனிப்பைப் பெறவில்லை.
- 2022 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை (102.2 லட்சத்தில் இருந்து 86.5 லட்சமாக) 15.4% குறைந்துள்ளது.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் ஏறக்குறைய பாதி பேர், மரணிக்கும் சமயத்தில் எந்தவித மருத்துவ உதவியையும் பெறவில்லை என 2022 ஆம் ஆண்டுக்கான சிவில் பதிவு அமைப்பு (CRS) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இது நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.
2022 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் 50.7% பேர் மரணத்தின்போது மருத்துவ கவனிப்பைப் பெறவில்லை. 2020 உடன் ஒப்பிடுகையில் இது 5 சதவீத சரிவாகும்.
மொத்த இறப்புகளில் எவ்வளவு சதவீதம் பதிவு செய்யப்படவில்லை என்பதற்கான தரவுகள் இல்லாததால், உண்மையான நிலை இன்னும் மோசமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
2021 உடன் ஒப்பிடுகையில்,2022 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை (102.2 லட்சத்தில் இருந்து 86.5 லட்சமாக) 15.4% குறைந்துள்ளது.
இது 2021 இல் கோவிட்-19 டெல்டா அலை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை சுட்டிக்காட்டுகிறது.
2022 இல் வெறும் 22.3% இறப்புகளுக்கு மட்டுமே மருத்துவ ரீதியாக காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, முக்கால்வாசி இறப்புகளுக்கான காரணங்கள் வகைப்படுத்தப்படவில்லை. இது மருத்துவ கவனிப்பு இல்லாததால் ஏற்பட்ட பாதிப்பாகும்.
மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்ட இறப்பு விகிதம் (MCCD) மாநிலங்களுக்கு இடையே பெரும் வேறுபாடுகளைக் காட்டுகிறது. உதாரணமாக, பீகாரில் 5.4%, தமிழ்நாட்டில் 43%, சிக்கிமில் 48.6% MCCD விகிதம் உள்ளது.
2022 இல் இந்தியாவின் சிசு மரண விகிதம் (stillbirth rate) 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 7.54 ஆக குறைந்துள்ளது. இது இந்தியாவின் 'நியூபார்ன் ஆக்ஷன் பிளான்' இலக்கை எட்டியுள்ளது. இருப்பினும், மேகாலயா (14.46), ராஜஸ்தான் (12.91), குஜராத் (10.47) போன்ற மாநிலங்கள் கவலைக்குரிய நிலையில் உள்ளன.
இந்த தரவுகள் இந்தியாவின் சுகாதார அமைப்பு, இறப்புப் பதிவு மற்றும் சமூக வளர்ச்சியில் உள்ள சவால்களை வெளிப்படுத்துகின்றன.
- அதிக வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் இந்தியாவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.
- வெயில் காலம் தொடங்கியதிலிருந்து ஒடிசாவில் மட்டும் இதுவரை 141 ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
காலநிலை நிலை மாற்றத்தால் மக்கள் மறைமுகமாக பாதிக்கப்பட்ட காலம் மாறி துரதிஷ்டவசமாக நேரடியாகவே பாதிக்கட்டும் காலம் வந்துவிட்டது. உலகம் முழுவதும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சம், பசி , பட்டினி, போர் ஆகியவற்றால் கொத்துக்கொத்தாக மக்கள் செத்துக்கொண்டிருக்கும் வேலையில் இயற்கையால் ஏற்படுத்தத்ப்பட்ட புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களாலும் சமீப காலங்களில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனோடு அதிக வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் இந்தியாவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.
முக்கியமாக வட மாநிலங்களில் நிலவிவரும் வரலாறு காணாத வெளியில் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வடகிழக்கு மாநிலமான ஒடிசாவில் கடந்த மே 30ஆம் தேதி ஒரே நாளில் ஹீட் காரணமாக 42 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த 72 மணி நேரத்தில் மற்றும் 99 பேர்ஹீட் ஸ்டார்க் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
வெயில் காலம் தொடங்கியதிலிருந்து ஒடிசாவில் மட்டும் இதுவரை 141 ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடம் இந்தியாவில் ஹீட் ஸ்ட்ரோக்கால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தொண்டை வறட்சி, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுகளில் வலி, வீக்கம் ஆகியவை முதலில் ஏற்படும்.
- உயிரிழப்புகள் அதிகபட்சமாக பாக்டீரியா தாக்கிய 48 மணி நேரத்துக்குள் ஏற்படும்
பாதித்த இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கும் சதையை உண்ணும் அரிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ட்ரெப்டோகோக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) (STSS) எனப்படும் நச்சு அதிர்ச்சி நோய் பாதிப்பு நச்சுக்களை இரத்த ஓட்டத்தில் பரவச் செய்து உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை விளைவிக்கிறது.
ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் முழுவதுமாக தளர்த்தப்பட்ட நிலையில் இந்த சதையை உண்ணும் பாக்டீரியடா ஜூன் 2 நிலவரப்படி சுமார் 977 பேரை தாக்கியுள்ளது. கடந்த வருடம் இதனால் 941 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அறிவியலாளர்கள் கூற்றுப்படி கடந்த 1999 ஆம் ஆண்டு இந்த பாக்டீரியா முதல் முதலில் கண்டறியப்பட்டது.

இந்த பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தொண்டை வறட்சி, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுகளில் வலி, வீக்கம் ஆகியவை முதலில் ஏற்படும். பின் படிப்படியாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் உறுப்புக்கள் செயலிழப்பு ஏற்பட்டு இறுதியில் மரணத்துக்கு வழிவகுக்கும். இந்த உயிரிழப்புகள் அதிகபட்சமாக பாக்டீரியா தாக்கிய 48 மணி நேரத்துக்குள் ஏற்படும் என்று டோக்கியோ மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நோய்த்தொற்றுகள் பிரிவு மருத்துவர் கென் கிகுச்சி தெரிவிக்கிறார்.
அதிகாலையில் முதலில் கால் வீக்கம் ஏற்பட்டு மதியத்துக்குள் மூட்டு வரை பரவும் அளவுக்கு பாதிப்பின் வீரியம் வேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது உள்ள பாக்டீரியா பரவல் வரும் நாட்களில் வேகம் எடுத்து பாதிப்பு எண்ணிக்கை 25,00 உயரும் என்று அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏன்னெனில் இந்த பாக்டீரியா மலத்தின் மூலம் அதிகம் பரவ வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
- ஊசி மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது.
- மருந்து நோயாளிகளுக்கு ஒத்துக்காமல் போனதால் 6 நோயாளிகள் பாதிப்பு.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் ஆண்கள் அறுவை சிகிச்சை உள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வார்டில் நேற்று இரவு 11 மணியளில் பணியில் இருந்த டாக்டர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த மருந்து நோயாளிகளுக்கு சரிவர ஒத்துக்காமல் போனதால் 6 நோயாளிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 6 பேரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரசு ஆஸ்பத்திரி டீன் தேவி மீனாள், டவுன் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிசங்கரி மற்றும் அரசு ஆஸ்பத்திரி இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.
ஊசி போட்டதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் பகுதியை சேர்ந்த வேணுகோபால் (வயது 40) என்பவர் அலர்ஜி ஏற்பட்டு இறந்து விட்டார். மேலும் தர்மபுரி மாவட்டம் நாகலூரை சேர்ந்த மனோஜ் (28), வாழப்பாடியை சேர்ந்த முருகேசன் (54), ஓமலூர் காமலாபுரம் பகுதியை சேர்ந்த அன்பழகன் (60), மனோகரன் (64), ரமேஷ் (45) ஆகிய 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் தேவிமீனாளிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
வேணுகோபாலுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு ஊசி போடப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு அலர்ஜி ஏற்பட்டது. இதைபார்த்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் உறவினர்களிடம் வேணு கோபாலின் உடலை ஒப்படைத்தனர். அவர்கள் உடலை பெற்று கொண்டு சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.
- திடீரென திருப்பத்தில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக அருள்தாஸ் மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது மோதியது.
- அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 55).
துணை ராணுவபடையில் போலீசாக வேலைபார்த்து ஓய்பெற்றவர்.
இவர் வீட்டில் இருந்து வேளாங்கண்ணிக்கு மோட்டார் சைக்கிளில் கிழக்குகடற்கரை சாலையில் சென்றபோது காரைநகர் பகுதியில் முன்னாள் ஸ்கூட்டியில் சென்றவர் திடீரென திருப்பத்தில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக அருள்தாஸ் மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது மோதியது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி அருள்தாஸ் பரிதாபமாக உயரிழந்தார்.
இது குறித்து கீழையூர் போல் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






