search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heatstroke"

    • வெப்பம் தணியாமல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவி பெற வேண்டும்.
    • கருப்பு நிற ஆடை அணிந்து வெளியே செல்ல வேண்டாம்.

    சென்னை:

    சென்னையில் கடுமையான வெப்பம் தாக்குவதால் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக நகரில் உள்ள 140 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆஸ்பத்திரிகளை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெப்பம் தணியாமல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவி பெற வேண்டும். சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நலவாழ்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக நகர் முழுவதும் தேவையான வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

     

    நகரில் 188 இடங்களில் கவுண்டர் அமைத்து வாய் வழி ரீ-ஹைட்ரஜன் (ஓ.ஆர்.எஸ்.) கரைசல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணைநோய் உள்ளவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். நண்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

    கருப்பு நிற ஆடை அணிந்து வெளியே செல்ல வேண்டாம். தலையில் தொப்பி அல்லது தலைப்பாகை அணிந்து வெளியில் செல்ல வேண்டும்.

    வெயிலில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக்கூடாது. நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தர்பூசணி, இளநீர், பழச்சாறுகள் அருந்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த பல நாட்களாக 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி வந்தது.
    • திடீர் பலத்த இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் கடந்த பல நாட்களாக 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி வந்தது. கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் குளிர்பானங்கள், பழ வகைகள் பல்வேறு குளுமையான பொருட்களை உட்கொண்டு வெயிலின் தாக்கத்தை குறைத்து வந்தனர். இதனை தொடர்ந்து காலையில் கடும் வெயிலும், மாலையில் திடீர் பலத்த இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் கடந்த 2 நாட்களாக காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் வெயில் அளவு இருந்து வந்ததால் பொதுமக்கள் மீண்டும் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வந்தனர்.

    நேற்று மாலை முதல் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்ததோடு குளிர்ந்த காற்று வீசி மழை பெய்து வந்தது. கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமுஷ்ணம், விருத்தாச்சலம், சிதம்பரம் ,லால்பேட்டை, ட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் திடீர் மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருபுறம் கடும் வெயிலும் மற்றொருபுறம் திடீர் மழையும் இருந்து வருவதால் சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:- விருத்தாசலம் - 12.0, பரங்கிப்பேட்டை - 11.2 , மீ-மாத்தூர் - 8.0 4. லால்பேட்டை - 6.0 , ஸ்ரீமுஷ்ணம் -5.1 6, காட்டுமன்னார்கோயில் - 4.0 7. ,குப்பநத்தம் - 3.2 , கொத்தவாச்சேரி - 3.0 , பண்ருட்டி - 2.0 , குறிஞ்சிப்பாடி - 2.0 11. அண்ணாமலைநகர் - 2.0 , புவனகிரி - 2.0 , சேத்தியாதோப்பு - 2.0 .. பெல்லாந்துறை - 1.8 , சிதம்பரம் - 1.5 , கலெக்டர் அலுவலகம் - 1.4 , கடலூர் - 1.3 , வடக்குத்து - 1.௦ கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 69.50 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • டி.ஐ.ஜி. உத்தரவு
    • வெயில் தாக்கம் அதிகரிப்பால் நடவடிக்கை

    வேலூர்:

    ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை விசாரணைக்காக அலைக்கழிக்க வேண்டாம் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ''நான்கு மாவட்டங்களில் பெரும்பாலான நாட்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் தாக்கம் உள்ளது. எனவே, கோடை காலங்களில் போலீஸ் அதிகாரிகள் தங்கள் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    போலீஸ் நிலையத்துக்கு வரும் குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கனிவுடன் வரவேற்று அவர்களை நிழலில் இளைப்பாறச் செய்து அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.

    வெகு தொலைவில் இருந்து விசாரணைக்காக வருபவர்களை திரும்பத்திரும்ப வரச்சொல்லி கட்டாயப்படுத்தாமல் விரைவான நீதி கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதியவர்களுக்கு கோடை காலங்களில் தலைசுற்றல், திடீர் மயக்கம் போன்ற உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கும். எனவே, மனித நேயத்தோடு மனுதாரர்களையும் எதிர் மனுதாரர்களையும் விசாரணை செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காக்கை, குருவி போன்ற பறவைகள் நீரின்றி அலையும் அவலத்தை தவிர்க்க சிறு, சிறு மண் குவளைகளில் நீர் ஊற்றி போலீஸ் நிலையங்களை சுற்றியுள்ள இடங்களில் திறந்த வெளிகளில் வைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    ×