search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபோன்"

    ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்கள் உற்பத்தியை மெல்ல சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
     

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்பிள் நிறுவன சாதனங்கள் உற்பத்திக்காக சீனாவை மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆப்பில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை மாற்றும் முடிவு குறித்த புது தகவலை பிரபல ஆப்பிள் வல்லுனர் மிங் சி கியோ தெரிவித்து உள்ளார்.

    சீனாவில் இருந்து ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தி இந்தியாவுக்கு மாற்றும் முடிவு சிறப்பான ஒன்று தான், ஆனால் இவ்வாறு செய்யும் போது சீனாவை சேர்ந்த ஆப்பிள் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் உற்பத்தியை மாற்றும் போது வீண் பிரச்சினைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே நிலவும் அரசியல் பிரச்சினை காரணமாக ஆப்பிள் தனது சாதனங்கள் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

     ஐபோன்

    இதோடு சீனாவுக்கு அடுத்தப்படியாக உற்பத்திக்கான சிறந்த சூழல் கொண்ட நாடுகளில் வியட்நாம் முதன்மையானது என அவர் தெரிவித்து இருக்கிறார். சீனா மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் அரசியல் மோதல்கள் காரணமாகவும் ஆப்பிள் தனது உறிபத்தியை சீனாவில் இருந்து மாற்ற முடிவு எடுத்துள்ளது. 

    இதுகுறித்து வெளியான மற்ற தகவல்களின் படி ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலுக்கான உற்பத்தி பணிகள் வியட்நாமில் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலில் லைட்னிங் போர்ட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். முந்தைய தகவல்களில் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 யு.எஸ்.பி. டைப் சி கனெக்டர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. 
    ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்கள் சீனாவில் செயல்பட்டு வரும் உற்பத்தி ஆலைகளிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சீனாவின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை சீனாவுக்கு வெளியில் அதிகப்படுத்த தனது உற்பத்தியாளர்களிடம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஐபோன் மற்றும் இதர உதிரிபாகங்கள் உற்பத்தியில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

    சீனாவுக்கு அடுத்து இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற பகுதிகளில் ஆப்பிள் தனது சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இந்த இரண்டு நாடுகளில் ஆப்பிள் தனது உற்பத்தியை தற்போது இருப்பதை விட அதிகப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

    ஐபோன்

    அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் தனக்கான உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மெல்ல மாற்றம் செய்யும் முடிவு எடுக்க இருக்கிறது. இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரத்தில் சீனா ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருப்பதை காரணம் காட்டி சீனாவை உற்பத்திக்காக சார்ந்து இருக்கக் கூடாது என நினைக்கும் மேற்கத்திய நிறுவனங்களையும் தங்களின் உற்பத்தியை சீனாவுக்கு வெளியில் மேற்கொள்ளச் செய்யும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் மற்றும் மேக்புக் லேப்டாப் என 90 சதவீத சாதனங்கள் வெளி நிறுவன உற்பத்தியாளர்களால் சீனாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஷாங்காய் மற்றும் சீனாவின் இதர நகரங்களில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு மேற்கத்திய நிறுவனங்களின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. 

    சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவை ஆப்பிள் தனது சாதனங்களை உற்பத்தி செய்ய சாதகமான சந்தையாக பார்க்கிறது. சீனாவை போன்றே இந்தியாவிலும் பெருமளவு உற்பத்தி பணிகளை மிக குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ள முடியும். சில உற்பத்தியாளர்களிடம் இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்ள செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆப்பிள் நிறுவனம் துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ×