search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நிலை தடுமாறி கீழே விழுந்த பாட்டியை காப்பாற்றிய  ஆப்பிள் வாட்ச் 4
    X

    நிலை தடுமாறி கீழே விழுந்த பாட்டியை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச் 4

    ஜெர்மனி நாட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்த 80 வயதான மூதாட்டியை ஆப்பிள் வாட்ச் 4 காப்பாற்றியிருக்கிறது. #AppleWatch4



    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டன. முற்றிலும் புதிய வடிவமைப்பு, வாட்ச் ஓ.எஸ். 5, ஃபால் டிடெக்‌ஷன் போன்றவற்றை ஆப்பிள் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச்சில் சேர்த்திருக்கிறது. இ.சி.ஜி. மற்றும் ஃபால் டிடெக்‌ஷன் போன்ற வசதிகள் மற்ற ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் இதுவரை வழங்கப்படவில்லை.

    இதில் இ.சி.ஜி. அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஃபால் டிடெக்‌ஷன் அம்சம் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தானாகவே செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இ.சி.ஜி. மற்றும் ஃபால் டிடெக்‌ஷன் அம்சம் ஆபத்து காலங்களில் பலருக்கு பயன்தரும் அம்சமாக இருக்கிறது.

    அந்த வகையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜெர்மனியில் நிலை தடுமாறி கீழே விழுந்த 80 வயது மூதாட்டியை காப்பாற்ற அவசர உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் உதவியை நாடியது. ஜெர்மனியில் அவசர உதவி எண் 112-ஐ அழைத்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குரலில், ஒருவர் பலமாக கீழே விழுந்துவிட்டார் என தகவல் கொடுத்தது.



    இதைத் தொடர்ந்து மூதாட்டியின் வீட்டு முகவரியை ஆப்பிள் வாட்ச் 4 அனுப்பியது. பின் இதே முகவரிக்கு ஆம்புலன்ஸ் வந்தது. எனினும், கதவு உள்புறத்தில் தாழிடப்பட்டிருந்ததால் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் தீயணைப்பு துறை உதவியுடன் கதவு திறக்கப்பட்டு மூதாட்டி மீட்கப்பட்டார். 

    மீட்கப்பட்ட மூதாட்டிக்கு முதலுதவி செய்யப்பட்ட வேளையில் ஆப்பிள் வாட்ச் 4-இல் பதிவு செய்யப்பட்டிருந்த அவரது மகனுக்கு ஆப்பிள் வாட்ச் தகவல் கொடுத்தது. ஆப்பிள் வாட்ச் கொண்டு பயனர்கள் அவசர காலத்தில் காப்பாற்றப்பட்டது ஏற்கனவே நடந்திருக்கிறது. 

    முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 67 வயது முதியவர் குளியலறையில் கீழே விழுந்து, பின் ஆப்பிள் வாட்ச் கொடுத்த தகவலால் காப்பாற்றப்பட்டார். இந்தியாவில் வாட்ச் சீரிஸ் 4 மாடல் விலை ரூ.40,900 முதல் துவங்குகிறது.
    Next Story
    ×