என் மலர்

  நீங்கள் தேடியது "Apple Watch 4"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெர்மனி நாட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்த 80 வயதான மூதாட்டியை ஆப்பிள் வாட்ச் 4 காப்பாற்றியிருக்கிறது. #AppleWatch4  ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டன. முற்றிலும் புதிய வடிவமைப்பு, வாட்ச் ஓ.எஸ். 5, ஃபால் டிடெக்‌ஷன் போன்றவற்றை ஆப்பிள் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச்சில் சேர்த்திருக்கிறது. இ.சி.ஜி. மற்றும் ஃபால் டிடெக்‌ஷன் போன்ற வசதிகள் மற்ற ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் இதுவரை வழங்கப்படவில்லை.

  இதில் இ.சி.ஜி. அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஃபால் டிடெக்‌ஷன் அம்சம் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தானாகவே செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இ.சி.ஜி. மற்றும் ஃபால் டிடெக்‌ஷன் அம்சம் ஆபத்து காலங்களில் பலருக்கு பயன்தரும் அம்சமாக இருக்கிறது.

  அந்த வகையில் தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜெர்மனியில் நிலை தடுமாறி கீழே விழுந்த 80 வயது மூதாட்டியை காப்பாற்ற அவசர உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் உதவியை நாடியது. ஜெர்மனியில் அவசர உதவி எண் 112-ஐ அழைத்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குரலில், ஒருவர் பலமாக கீழே விழுந்துவிட்டார் என தகவல் கொடுத்தது.  இதைத் தொடர்ந்து மூதாட்டியின் வீட்டு முகவரியை ஆப்பிள் வாட்ச் 4 அனுப்பியது. பின் இதே முகவரிக்கு ஆம்புலன்ஸ் வந்தது. எனினும், கதவு உள்புறத்தில் தாழிடப்பட்டிருந்ததால் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் தீயணைப்பு துறை உதவியுடன் கதவு திறக்கப்பட்டு மூதாட்டி மீட்கப்பட்டார். 

  மீட்கப்பட்ட மூதாட்டிக்கு முதலுதவி செய்யப்பட்ட வேளையில் ஆப்பிள் வாட்ச் 4-இல் பதிவு செய்யப்பட்டிருந்த அவரது மகனுக்கு ஆப்பிள் வாட்ச் தகவல் கொடுத்தது. ஆப்பிள் வாட்ச் கொண்டு பயனர்கள் அவசர காலத்தில் காப்பாற்றப்பட்டது ஏற்கனவே நடந்திருக்கிறது. 

  முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 67 வயது முதியவர் குளியலறையில் கீழே விழுந்து, பின் ஆப்பிள் வாட்ச் கொடுத்த தகவலால் காப்பாற்றப்பட்டார். இந்தியாவில் வாட்ச் சீரிஸ் 4 மாடல் விலை ரூ.40,900 முதல் துவங்குகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் இ.சி.ஜி. எடுக்கும் வசதி வழங்கப்படுகிறது. #AppleWatch


   
  ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் சீரிஸ் 4 மாடலை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. புதிய சீரிஸ் 4 வாட்ச் மாடல்களில் அனைவரையும் கவர்ந்த அம்சங்களில் ஒன்றாக இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் அம்சம் இருந்தது. எனினும், இந்த அம்சம் பயனர்களின் வாட்ச் ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்படாமல் இருந்தது. 

  தற்சமயம் கிடைத்து இருக்கும் தகவல்களின் படி வாட்ச் ஓ.எஸ். 5.1.2 பதிப்பில் இ.சி.ஜி. வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் அமெரிக்காவில் மட்டும் தான் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. உலகின் மற்ற நாடுகளில் இந்த அம்சம் வழங்குவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

  ஆப்பிள் விற்பனை மைய பயிற்சி அறிக்கைகளில், வாட்ச் ஓ.எஸ். 5.1.2 பதிப்பில் ஆப்பிள் வடிவமைத்த இ.சி.ஜி. ஆப் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செயலி பயனர்களின் இதய துடிப்பை டிராக் செய்து, இதய ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை வழங்கும்.  இந்த அம்சம் வழங்கப்பட்டதும், பயனர்கள் தங்களது புதிய ஆப்பிள் வாட்ச் டிஜிட்டல் கிரவுனை தொட்டு இ.சி.ஜி. சென்சாரை ஆக்டிவேட் செய்யலாம். இனி உங்களது இ.சி.ஜி. பரிசோதனை அறிக்கை 30 நொடிகளில் உங்களின் திரையில் தெரியும். இதோடு வாட்ச் பயனரின் இதய துடிப்பை சீரான இடைவெளியில் தானாக டிராக் செய்து கொண்டிருக்கும்.

  பயனரின் ஆரோக்கிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டு முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது. பயனர்கள் தங்களது இ.சி.ஜி. பரிசோதனை அறிக்கையை மருத்துவர்களுடன் பி.டி.எஃப். வடிவில் பகிர்ந்து கொள்ள முடியும்.

  வாட்ச் ஓ.எஸ். 5.1.2 இயங்குதளம் தற்சமயம் பீட்டா முறையில் சோதனை செய்யப்படுகிறது. அனைவருக்கும் வழங்கப்படும் போது, பயனர்கள் இ.சி.ஜி. பரிசோதனையை தாங்களாகவே செய்து கொள்ளலாம். ஆப்பிள் புதிய அப்டேட் எப்போது வழங்கும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. #AppleWatch 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் சீரிஸ் 4 மாடல்கள் இந்தியாவில் முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #AppleWatchSeries4  ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வாட்ச் சீரிஸ் 4 மாடல்களை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. 40 எம்.எம். மற்றும் 44 எம்.எம். என இருவித அளவுகளில் கிடைக்கும் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

  இத்துடன் டிஜிட்டல் கிரவுன், ஹெப்டிக் ஃபீட்பேக், 50% அதிக சத்தம் வழங்கும் ஸ்பீக்கர்கள், எஸ்4 சிப், 64-பிட் டூயல் கோர் பிராசஸர், புதிய உடல்நலன் அம்சங்கள், புதிய அக்செல்லோமீட்டர் மற்றும் கைரோஸ்கோப் உள்ளிட்டவை கொண்டுள்ளது. 

  புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடல்கள் பிளிப்கார்ட் மற்றும் ஆப்பிள் பொருட்களை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்வோரிடம் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 விலை ரூ.40,000 முதல் துவங்கும் நிலையில், இவற்றின் விநியோகம் அக்டோபர் 19-ம் தேதி முதல் துவங்குகிறது.  முன்பதிவு துவங்கிய சில மணி நேரங்களுக்குள் சில ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடல்கள் விற்றுத் தீர்ந்துள்ளது. 

  ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 40எம்.எம். (ஜி.பி.எஸ்.) கோல்டு அலுமினியம் கேஸ், பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / சில்வர் அலுமினியம் கேஸ், வைட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் பேன்ட் / சில்வர் அலுமினியம் கேஸ், சீஷெல் ஸ்போர்ட் லூப் / கோல்டு அலுமினியம் கேஸ், பின்க் சேன்ட் ஸ்போர்ட் லூப் விலை ரூ.40,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 44எம்.எம். (ஜி.பி.எஸ்.) கோல்டு அலுமினியம் கேஸ், பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் லூப் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் பேன்ட் விலை ரூ.43,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 44எம்.எம். (ஜி.பி.எஸ்.+செல்லுலார்) கோல்டு அலுமினியம் கேஸ், பின்க் சேன்ட் ஸ்போர்ட் பேன்ட் / ஸ்பேஸ் கிரே அலுமினியம் கேஸ், பிளாக் ஸ்போர்ட் லூப் / சில்வர் அலுமினியம் கேஸ், வைட் ஸ்போர்ட் பேன்ட் விலை ரூ.52,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  ×