என் மலர்

  நீங்கள் தேடியது "Qualcomm"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே நடைபெற்ற பிரச்சனை சுமூகமாக ஆப்பிள் நிறுவனம் செலவிட்ட தொகை விவரம் வெளியாகியுள்ளது. #Apple  ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே நடைபெற்ற வழக்குகளை இருதரப்பும் திரும்பப் பெற ஆப்பிள் நிறுவனம் குவால்காமிற்கு ரூ.34,700 கோடி முதல் ரூ.41,600 கோடி வரை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  இதுகுறித்து வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஒரு ஐபோனிற்கு 8 முதல் 9 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.550 முதல் ரூ.620) வரை இழப்பீடாக வழங்க ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  உலகின் பல்வேறு நாடுகளில் இருநிறுவனங்களும் வழக்குகளை எதிர்கொண்டிருந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபோன் வெளியீடு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் உயர் தொகையை செலவிட்டு சட்ட பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.  ஆப்பிள் மற்றும் குவால்காம் இதுபற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. இருநிறுவனங்களிடையே கையெழுத்தாகி இருக்கும் புதிய ஒப்பந்தம் 5ஜி ஐபோன் வெளியீட்டை வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சட்ட பிரச்சனைகளுக்கான தீர்வு நடவடிக்கையின் படி ஆப்பிள் நிறுவனம் குவால்காமிற்கு பணம் கொடுக்க வேண்டும். இரு நிறுவனங்களிடையே ஆறு ஆண்டுகளுக்கு வியாபாரம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 1, 2019 முதல் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தை இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதலாக நீட்டிக்க முடியும். 

  இருநிறுவனங்களிடையே கையெழுத்தாகி இருக்கும் புதிய ஒப்பந்தத்தின் படி குவால்காம் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு பல ஆண்டுகளுக்கு சிப்செட்களை விநியோகம் செய்ய இருக்கிறது. இந்த ஒப்பந்தம் குவால்காம் நிறுவனத்தின் வியாபாரம், தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேலும் அதிகப்படுத்தும் என குவால்காம் தெரிவித்தது.

  2017 ஆம் ஆண்டு முதல் குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே காப்புரிமை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வந்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே உலகம் முழுவதும் நடைபெற்று வரும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. #Apple  ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே உலகம் முழுக்க பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பல ஆண்டுகளாக இருநிறுவனங்களும் ஒருவரையொருவர் எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றன.

  அந்த வகையில், ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் உலகம் முழுக்க இருநிறுவனங்கள் தொடர்பாக நடைபெற்று வரும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன. புதிய முடிவில் ஆப்பிள் ஒப்பந்தம் செய்த உற்பத்தியாளர்களுக்கு எதிரான வழக்குகளையும் திரும்பப் பெறுவதாக குவால்காம் அறிவித்துள்ளது.

  ஆப்பிள் மற்றும் குவால்காம் இடையேயான இந்த திடீர் முடிவிற்கு ஆப்பிள் நிறுவனம் குவால்காம் நிறுவனத்திற்கு ஒருமுறை செலுத்தக் கூடிய தொகை ஒன்றை வழங்க இருப்பதாக தெரிகிறது. எனினும், குவால்காம் நிறுவனத்திற்கு ஆப்பிள் எவ்வளவு தொகை வழங்குகிறது என்பது பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.  வழக்குகளை திரும்பப் பெறுவதுடன் ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே ஆறு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 1, 2019 முதல் அமலானது. இந்த ஒப்பந்தத்தை இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதலாக நீட்டிக்க முடியும்.

  இருநிறுவனங்களிடையே கையெழுத்தாகி இருக்கும் புதிய ஒப்பந்தத்தின் படி குவால்காம் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு பல ஆண்டுகளுக்கு சிப்செட்களை விநியோகம் செய்ய இருக்கிறது. இந்த ஒப்பந்தம் குவால்காம் நிறுவனத்தின் வியாபாரம், தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேலும் அதிகப்படுத்தும் என குவால்காம் தெரிவித்துள்ளது.   2017 ஆம் ஆண்டு முதல் குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே காப்புரிமை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வந்தது. ஆப்பிள் நிறுவனம் குவால்காமிற்கு காப்புரிமை கட்டணங்களை செலுத்துவதை நிறுத்திவிட்டு, புதிய ஐபோன் மாடல்களில் குவால்காம் சிப்களை வழங்குவதை முற்றிலும் நிறுத்திவிட்டது. 

  இதைத் தொடர்ந்து குவால்காம் நிறுவனம் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சீனாவில் ஐபோன் இறக்குமதிக்கு தடை விதிக்க வழக்கு பதிவு செய்தது. தற்சமயம் இரு நிறுவனங்களிடையே கையெழுத்தாகியிருக்கும் புதிய ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த ஆண்டு ஐபோன்களில் குவால்காமின் 5ஜி மோடெம்களை எதிர்பார்க்கலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குவால்காம் நிறுவனம் புதிதாக மொபைல் பிராசஸர்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் ஏ.ஐ., கேமரா மற்றும் கேமிங் வசதிகள் அதிகளவு மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. #Qualcomm  குவால்காம் நிறுவனம் புதிய வகை மொபைல் பிராசஸர்களை அறிமுகம் செய்துள்ளது. இவை ஸ்னாப்டிராகன் 665, ஸ்னாப்டிராகன் 730 மற்றும் ஸ்னாப்டிராகன் 730ஜி என அழைக்கப்படுகின்றன.

  புதிய ஸ்னாப்டிராகன் மொபைல் பிராசஸர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), கேமரா மற்றும் கேமிங் உள்ளிட்ட அம்சங்களில் அதிகளவு மேம்படுத்தப்பட்டுள்ளன. ஸ்னாப்டிராகன் 665 மற்றும் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்கள் அதிகளவு பயன்பாட்டிற்கென உருவாக்கப்பட்டிருக்கிறது.   ஸ்னாப்டிராகன் 730ஜி கேமிங் வசதியை வழங்கும் நோக்கில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்னாப்டிராகன் 665, ஸ்னாப்டிராகன் 770 மற்றும் ஸ்னாப்டிராகன் 730ஜி உள்ளிட்டவற்றில் ஏ.ஐ. வசதி குவால்காம் ஏ.ஐ. என்ஜின் வேரியன்ட் மற்றும் ஹெக்சகன் வெக்டார் எக்ஸ்டென்ஷன்களின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

  புதிய பிராசஸர்களில் குவால்காம் நிறுவனம் மல்டி-கேமரா வசதி மற்றும் பல்வேறு இதர கேமரா ஆப்ஷன்களும் சேர்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 665, ஸ்னாப்டிராகன் 730 மற்றும் ஸ்னாப்டிராகன் 730ஜி உள்ளிட்டவை ஏற்கனவே வணிக ரீதியில் தயாராகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அந்த வகையில் புதிய குவால்காம் பிராசஸர்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் 2019 அரையாண்டு காலத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனையை குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து துவங்க இருக்கிறது. #OnePlus #5G  ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனைகளை துவங்க இருக்கிறது. இதற்கென ஒன்பிளஸ் நிறுவனம் குவால்காமுடன் இணைந்திருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ப்ரோடோடைப் சாதனத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்தது.

  இத்துடன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் வெளியாகும் என அறிவித்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 5ஜி சேவை வழங்கும் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாகவும், இது 5ஜி வசதி கொண்ட சாதனங்களில் முதன்மையாதாக இருக்கும் ஒன்பிளஸ் அறிவித்திருந்தது.  குவால்காமின் 800 சீரிஸ் ஸ்னாப்டிராகன் பிராசஸர்களை எங்களின் முதல் தலைமுறை சாதனத்தில் இருந்து தொடர்ச்சியாக வழங்கி வருகிறோம். இந்த கூட்டனியின் மூலம் உலகிற்கு மிகச்சிறப்பான 5ஜி சாதனத்தை கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது என ஒன்பிளஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

  இதுதவிர ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில 5ஜி வசதி வழங்கப்படாது என்றும், 5ஜி சேவைக்கென புதிய சாதனம் அறிமுகமாகும் என ஒன்பிளஸ் அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களிலும் ஒன்பிளஸ் நிறுவனம் 5ஜி சேவைக்கென தனி சாதனங்களை அறிமுகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

  5ஜி சேவைக்கான கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதாசாதனத்தின் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. 5ஜி சேவைக்கென தனி சாதனங்களை அறிமுகம் செய்வதன் மூலம் 5ஜி இல்லாத சாதனங்களை தற்போதைய வழக்கத்தை மாற்றாமல், குறைந்த விலையில் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய முடியும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்கள் குவால்காம் சிப்செட்டுடன் ஜெர்மனியில் மீண்டும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple #Qualcomm  ஆப்பிள் நிறுவனம் தனது பழைய ஐபோன் மாடல்களை ஜெர்மனியில் மீண்டும் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இம்முறை ஐபோன்கள் குவால்காம் சிப்களை கொண்டிருக்கும் என தெரிவித்திருக்கிறது. 

  முன்னதாக குவாலகாம் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதால் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களின் விற்பனைக்கு ஜெர்மனியின் 15 சில்லறை விற்பனையகங்களில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் குவால்காம் காப்புரிமைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
   
  இந்நிலையில், குவால்காம் நிறுவனம் மொபைல் போன்களை வயர்லெஸ் டேட்டா நெட்வொர்க்களுடன் இணைக்கும் மோடெம் உருவாக்குவதில் ஆப்பிள் நிறுவனம் காப்புரிமைகளை மீறியிருப்பதாக ஆப்பிள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.   எனினும், ஆப்பிள் நிறுவனமும் காப்புரிமைகளை மீறியதாக குவால்காம் தெரிவித்து வருகிறது. இருநிறுவனங்கள் சார்ந்த முக்கிய வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வரயிருக்கிறது.  

  2016 ஆம் ஆண்டு வரை ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் குவால்காம் சிப்செட்களை வழங்கிவந்தது. பின் 2016 ஆம் ஆண்டுக்கு பின் குவால்காம் சிப்களை தவிரித்து, ஆப்பிள் நிறுவனம் இன்டெல் மோடெம் சிப்களை வழங்க துவங்கியது. கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த சாதனங்களில் அந்நிறுவனம் இன்டெல் சிப்களை மட்டுமே பயன்படுத்தியிருந்தது. 

  இந்த சூழலிலும் ஆப்பிள் தனது பழைய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களில் மட்டும் தொடர்ந்து குவால்காம் சிப்களை பயன்படுத்தி வருகிறது. இன்டெல் சிப்களை கொண்டிருக்கும் புதிய ஐபோன் மாடல்கள் ஜெர்மனியில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்கள் விற்பனைக்கு ஜெர்மனி நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. #Apple #iPhone #Qualcomm  ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக குவால்காம் தொடர்ந்த வழக்கில் ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன் படி ஜெர்மனியில் ஐபோன் 7,  ஐபோன் 8 மாடல்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீன நீதிமன்றமும் சில ஐபோன்களின் விற்பனைக்கு அந்நாட்டில் தடை விதித்து இருந்தது.

  ஐபோன் விற்பனைக்கான தடையை ரத்து செய்யக்கோரி ஆப்பிள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும், ஜெர்மனி நாட்டின் சில மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் ஐபோன்களை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன.

  ஜெர்மனியில் இயங்கி வரும் 15 விற்பனை மையங்களில் நீதிமன்ற உத்தரவின் படி ஐபோன் மாடல்கள் விற்பனை செய்யப்படாது என ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஐபோன்களின் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆப்பிள் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவது உறுதியாகி இருக்கிறது.  ஜெர்மனியில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களின் விற்பனை மூலம் ஆப்பிள் பெற்ற மொத்த வருவாய் மற்றும் லாபம் உள்ளிட்ட விவரங்களை ஆப்பிள் வழங்க வேண்டும் என்ற குவால்காமின் கோரிக்கையை ஏற்று அது தொடர்பான விவரங்களை சமர்பிக்க ஆப்பிள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  ஏற்கனவே சீன விற்பனைக்கான தடையை தவிர்க்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுக்கு மென்பொருள் அப்டேட் வழங்கியது. புதிய அப்டேட் மூலம் ஐபோன்களின் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாத வகையில் இருக்கும் என ஆப்பிள் தெரிவித்தது.

  இவ்வாறு பயனர்கள் தங்களது ஐபோன்களை அப்டேட் செய்யும்போது செயலிகளிடையே மாறும் விதம், அளவு மற்றும் புகைப்படங்களின் தோற்றம் உள்ளிட்டவை மாறியிருப்பதை கவனிக்க முடியும். ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஒருவரை ஒருவர் எதிர்த்து பரஸ்பரம் வழக்கு தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபோன் விற்பனைக்கான தடையை தவிர்க்க ஆப்பிள் நிறுவனம் சீன ஐபோன் மாடல்களுக்கு அப்டேட் வழங்க முடிவு செய்துள்ளது. #Apple  சீனாவில் உள்ள ஐபோன்களுக்கு அப்டேட் வழங்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சீனாவில் ஐபோன்களின் விற்பனைக்கு குவால்காம் நிறுவனம் தடைக் கோரி வழக்கு தொடர்ந்து இருந்தது. இதைத் தொடர்ந்து சீன நீதிமன்றம் ஐபோன் விற்பனைக்கு தடை விதித்தது.

  அந்த வகையில் சீன விற்பனைக்கான தடையை தவிர்க்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுக்கு மென்பொருள் அப்டேட் வழங்குகிறது. புதிய அப்டேட் மூலம் ஐபோன்களின் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாத வகையில் இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

  இவ்வாறு பயனர்கள் தங்களது ஐபோன்களை அப்டேட் செய்யும் போது செயலிகளிடையே மாறும் விதம், அளவு மற்றும் புகைப்படங்களின் தோற்றம் உள்ளிட்டவை மாறியிருப்பதை கவனிக்க முடியும். ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் உலகம் முழுக்க ஒவ்வொருத்தரை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கின்றன.  பல கோடி டாலர்கள் நஷ்ட ஈடு கேட்டு இருதரப்பில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் இருதரப்புக்கும் வெற்றி, தோல்விகள் கிடைத்திருக்கின்றன. அந்த வகையில் குவால்காமின் சமீபத்திய வழக்கில் சீன நீதிமன்றம் தேர்வு செய்யப்பட்ட சில ஐபோன் மாடல்களின் விற்பனைக்கு தடை விதித்தது.

  எனினும், ஆப்பிள் தொடர்ந்து தனது ஐபோன் மாடல்களை சீனாவில் தொடர்ந்து விற்பனை செய்கிறது.

  “ஆப்பிள் நீதிமன்ற உத்தரவை மீறுகிறது. சட்ட ரீதியாக ஐபோன்களின் விற்பனையை நிறுத்த வேண்டும், விற்பனைக்கு எவ்வித சலுகைகளையும் வழங்கக் கூடாது, உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் மாடல்களை இறக்குமதி செய்யக் கூடாது,” என குவால்காம் நிறுவனத்தின் துணை தலைவர் டான் ரோசென்பர்க் தெரிவித்தார். 

  சீன நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து, ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் குவால்காம் நிறுவனம் ஏற்கனவே சர்வதேச நீதிமன்றத்தால் செல்லாது என அறிவிக்கப்பட்ட காப்புரிமைகளுக்கு உரிமை கொண்டாட முயற்சிப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குவால்காம் நிறுவனம் வர்த்தக ரீதியிலான உலகின் முதல் 5ஜி மொபைல் பிராசஸரான, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 அறிமுகம் செய்தது. #Qualcomm  ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் குவால்காம் நிறுவனம் உலகின் வர்த்தர ரீதியிலான முதல் 5ஜி மொபைல் பிராசஸரை அறிமுகம் செய்துள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 என அழைக்கப்படும் இந்த பிராசஸர் 2019ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியாகும் மொபைல் சாதனங்களில் 5ஜி வசதியை வழங்கும்.

  ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் உடன் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் மற்றும் குவால்காம் QTM052 எம்.எம். வேவ் ஆன்டெனா மாட்யூல்கள் மற்றும் இதர சிக்னல் உபகரணங்களுடன் இணைக்கப்படுகிறது. இதனால் மொபைல் போன் வடிவமைப்பாளர்கள் புதிய சாதனங்களை வடிவமைக்க அதிக வாய்ப்புகளை வழங்குவதோடு, 5ஜி சேவையை 6 ஜிகாஹெர்ட்ஸ்-க்கும் குறைவான எம்.எம். வேவ் பேன்ட்களை வழங்குகிறது.  அமெரிக்கா, ஐரோப்பியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி சேவை 2019 ஆண்டின் துவக்கத்தில் வழங்கப்பட இருக்கிறது. 2020 மற்றும் 2021 ஆண்டு வாக்கில் இந்தியா மற்றும் லத்தின் அமெரிக்காவில் 5ஜி சேவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  எம்.எம். வேவ் வசதி மற்றும் 6 ஜிகாஹெர்ட்ஸ்-க்கும் குறைந்த வர்த்தக ரீதியில் உலகின் முதல் 5ஜி மொபைல் பிராசஸர் ஸ்னாப்டிராகன் 855 என குவால்காம் தெரிவித்துள்ளது.   இதுதவிர புது ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரில் 4ம் தலைமுறை ஆன்-டிவைஸ் ஏ.ஐ. என்ஜின், முந்தைய தலைமுறை மொபைல் பிராசஸரை விட மும்மடங்கு சிறப்பான ஏ.ஐ. செயல்திறன், ட்ரூ 4K HDR வீடியோ பதிவு செய்யும் வசதி, 3டி சோனிக் செனசார், உலகின் முதல் வர்த்தக ரீதியிலான அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் வசதி கொண்டிருக்கிறது.

  குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் 7 நானோமீட்டர் ஃபேப்ரிகேஷன் மூலம் உருவாகி இருக்கிறது. இந்த பிராசஸர் உலகின் முதல் கம்ப்யூட்டர் விஷன் ஐ.எஸ்.பி. வழங்கப்பட்டு இருப்பதால், புகைப்படம் மற்றும் வீடியோக்களை அதிக தரத்தில் படமாக்கும் வசதி கொண்டிருக்கிறது. #Qualcomm #Snapdragon855
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குவால்காம் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் பிராசஸர் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Snapdragon  குவால்காம் நிறுவனத்தின் அதிநவீன ஃபிளாக்ஷிப் பிராசஸர் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆண்டு தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குவால்காம் நிறுவனம் தனது ஆண்டு தொழில்நுட்ப மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.

  இவ்விழா டிசம்பர் 4ம் தேதி ஹவாயில் நடைபெற இருக்கிறது. இதே விழாவில் குவால்காம் நிறுவனம் தனது ஸ்னாப்டிராகன் 8150 பிராசஸரை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிராசஸர் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 845 பிராசஸரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும்.

  ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கடந்த ஆணஅடு நடைபெற்ற ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப் உடன் அட்ரினோ 640 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய பிராசஸர் 'ஸ்னாப்டிராகன் 8XX' என்ற வகையில் பெயரிடப்படும் என கூறப்பட்டது.  புதிய பிராசஸர் ஸ்னாப்டிராகன் 855 என்றும் அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய பிராசஸர் கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 மாடல் இருக்கும் என்றும், இது சில காலத்திற்கு சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்க்படலாம் என்றும் கூறப்படுகிறது.

  குவால்காம் உருவாக்கி இருக்கும் புதிய பிராசஸர் முந்தைய ஸ்னாப்டிராகன் 845 விட 30 சதவிகிதம் வேகமாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் மாநாட்டின் கரு முதல் 5ஜி அனுபவத்திற்கு தயாராகுகங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய பிராசஸரில் 5ஜி நெட்வொர்க் சப்போர்ட் இருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.

  குவால்காம் தொழில்நுட்ப மாநாடு டிசம்பர் 4ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனம் தனக்கென சொந்தமாக பிராசஸர்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. #Apple  ஆப்பிள் நிறுவனம் தனக்கென சொந்தமாக பிராசஸர் மற்றும் வயர்லெஸ் உபகரணங்களை உற்பத்தி செய்யும் நோக்கில் தீவிரமாக பொறியாளர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்கால ஐபோன் மாடல்களுக்கான சிப்செட்களை உற்பத்தி செய்ய குவால்காம் நிறுவனத்திற்கு வாய்ப்பு குறையலாம்.

  சான் டெய்கோவில் பணியாற்ற இந்த மாதத்தில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் பத்து வேலைவாய்ப்பு தகவல்களை பதிவிட்டுள்ளது. அதன்படி பிராசஸர் வடிவமைப்பிற்கென தெற்கு கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனம் வெளிப்படையாக ஆட்களை தேர்வு செய்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

  ஆப்பிள் விளம்பரங்களின் படி பொறியாளர்கள் அந்நிறுவனத்தின் சிப் உபகரணங்கள், ஆப்பிள் நியூரல் என்ஜின் செயற்கை நுண்ணறிவு பிராசஸர் மற்றும் வயர்லெஸ் சிப்செட்களில் பணியாற்றும் திறன் கொண்டிருக்க வேண்டி இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  வயர்லெஸ் உபகரணங்களில் உருவாக்க வன்பொருள் மற்றும் மென்பொருள் பொறியாளர்களை பணியமர்த்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் ஆப்பிள் சிப் வடிவமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஐபோன்களில் வழங்க வெவ்வேறு உபகரணங்களை அதிகளவு உற்பத்தி செய்ய இருக்கிறது. 

  இதன் மூலம் போட்டி நிறுவனங்களின் சாதனங்களை விட ஆப்பிள் ஃபிளாக்ஷிப் சாதனங்களை வித்தியாசப்படுத்த முடியும் என்பதோடு ஆப்பிள் செலவினங்களை குறைக்க முடியும் என கூறப்படுகிறது. இதுவரை ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் வயர்லெஸ் சிப்களை வழங்கி இருக்கிறது. எனினும் ஐபோன்களில் சொந்தமாக வயர்லெஸ் சிஸ்டம்களை உற்பத்தி செய்ததில்லை.

  ஆப்பிள் பணியமர்த்த இருக்கும் பொறியாளர்கள் எல்.டி.இ. மற்றும் ப்ளூடூத் போன்ற ப்ரோடோகால்களில் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. ஐபோன் மாடல்களில் வழங்கப்படும் வயர்லெஸ் உபகரணங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறது. இதனால் ஆப்பிள் வயர்லெஸ் உபகரணங்களுக்காக குவால்காம் நிறுவனத்தை அதிகம் நம்பியிருந்தது, பின் இன்டெல் நிறுவனத்தை நாடி இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குவால்காம் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களுக்கான வசதி கொண்ட ஸ்மார்ட்போன் கான்செப்ட் மாடலை இந்திய மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் அறிமுகம் செய்தது. #qualcomm  மொபைல் போன் சிப்செட் உருவாக்கும் குவால்காம் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் மாடலை இந்தியா மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.

  வட அமெரிக்கா மற்றும் கொரியாவில் 2019ம் ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் 5ஜி தொழில்நுட்பம் வணிக ரீதியில் வழங்கப்பட இருக்கிறது. 5ஜி தொழில்நுட்பம் அதிவேக இணைய வேகத்தை சீராக வழங்குகிறது. 

  “4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தை இயக்கும் வசதி கொண்ட கான்செப்ட் ஸ்மார்ட்போன் வடிவம் இது. இந்த ஸ்மார்ட்போன் மில்லிமீட்டர் வேவ் பேன்ட்கள் மற்றும் சப் 6 ஜிகாஹெர்ட்ஸ் பேன்ட்களை சப்போர்ட் செய்யும். 

  இதுபோன்ற வசதி கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் 2019ம் ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாக இருக்கின்றன,” என குவால்காம் டெக்னாலஜிஸ் நிறுவன மூத்த துணை தலைவர் துர்கா மல்லாடி தெரிவித்தார்.   “இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் அதிக பிரபலமானவையாக இருக்கின்றன. இங்கு சாதனம் மற்றும் உள்கட்டமைப்புகள் என இரண்டும் தயார் நிலையில் இருக்கும். அந்த வகையில் இந்திய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் கிடைக்கும் போது இந்தியாவில் 5ஜி சேவை சீராக வெளியிடப்படும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

  பொதுவாக புதிய தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் முதலில் பிரீமியம் சாதனங்களில் வழங்கி, அதன்பின் விலை குறைந்த சாதனங்களுக்கு பயன்பாட்டிற்கு வழங்கப்படும். இதன் பின் புதிய தொழில்நுட்பம் வெகுஜன மக்களிடையே அதிக வரவேற்பை பெறும்.

  “தற்சமயம் இந்த தொழில்நுட்பம் ஆரம்ப காலக்கட்டத்தில் தான் உள்ளது. இதற்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதும், நிறுவனங்கள் இதனை வெளியிட துவங்குவர், இதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது,” என அவர் தெரிவித்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print