என் மலர்
முகப்பு » 7
நீங்கள் தேடியது "ரெட்மி நோட் 7"
சியோமியின் ரெட்மி பிராண்டு சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் அதற்குள் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனினை ஜனவரி மாதத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் பின் பிப்ரவரி மாதத்தில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்சமயம் சந்தையில் விற்பனைக்கு வந்து வெறும் 129 நாட்களில் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையை கடந்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் இரண்டு மாதங்களில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் இந்திய சந்தையில் விற்பனையானதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது. மார்ச் 29 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்குள் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் சுமார் 40 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வெறும் 55 நாட்களில் அந்நிறுவனம் சுமார் 60 லட்சம் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. சமீபத்தில் சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
இதுதவிர சியோமி நிறுவனம் தனது ரெட்மி K20 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்கிறது. இதே ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போனை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்துள்ளது.
சியோமியின் ரெட்மி பிராண்டு பட்ஜெட் பிரிவில் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.
புதிய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, ஏ.ஐ. அம்சங்கள், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.
பாலிகார்பனைட் பாடி கொண்டிருக்கும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
சியோமி ரெட்மி 7ஏ சிறப்பம்சங்கள்
- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
- அட்ரினோ 505 GPU
- 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i நானோ கோட்டிங்)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சியோமி ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மே 28 ஆம் தேதி நடைபெறும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்படும்.
சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போனின் விற்பனையை விரைவில் நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சியோமி நிறுவனம் 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் சீனாவில் ஏற்கனவே அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 மாடல் ஆகும்.
இந்நிலையில், சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 7 மாடலின் விற்பனையை விரைவில் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. ரெட்மி நோட் 7 மாடலுக்கு மாற்றாக புதிய ரெட்மி நோட் 7எஸ் இருக்கும்.
ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்களின் தோற்றத்தில் பின்புற டூயல் கேமரா செட்டப் தவிர வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. 1/2″ சாம்சங் ISOCELL பிரைட் GM1 சென்சார் மற்றும் 5 எம்.பி. இரண்டாவது கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 12 எம்.பி. சோனி IMX486 சென்சார் கொண்ட பிரைமரி கேமரா, f/2.2 மற்றும் 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ICYMI, Redmi Note 7S will replace the Redmi Note 7 (might be a few days of overlap, but that's it) https://t.co/pXmWnzkTYH
— Yash Garg (@yash3339) May 20, 2019
சியோமி இந்தியா ஆன்லைன் விற்பனை பிரிவு தலைவர் ரகு ரெட்டி, இந்தியாவில் ரெட்மி நோட் 7 விற்பனை நிறுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். எனினும், விற்பனை நிறுத்தத்திற்கு சரியான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் கடந்த மாதம் முதல் ரெட்மி நோட் 7 ஓபன் சேல் நடைபெறுகிறது.
ப்ளிப்கார்ட் மற்றும் Mi வலைதளங்களில் ரெட்மி நோட் 7 அதிகளவு வரவேற்பு பெற்று வருவதால், ஸ்டாக் இருக்கும் வரை ரெட்மி நோட் 7 விற்பனையை நடத்த சியோமி திட்டமிட்டுள்ளது. அதன் பின் அடுத்த வாரம் முதல் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கும் என தெரிகிறது.
ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, P2i நானோ கோட்டிங், பின்புறம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 4.0, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இந்தியாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதில் 48 எம்.பி. 1/2″ சாம்சங் ISOCELL பிரைட் GM1 சென்சார், 4-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது புகைப்படங்களை 12 எம்.பி. தரத்தில் வழங்கும். இத்துடன் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
மற்ற சிறப்பம்சங்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியே வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முன்புறம் 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், ஃபேஸ் அன்லாக், 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, ஔரா வடிவமைப்பு, கிளாஸ் பேக் மற்றும் 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருப்பதோடு P2i ஸ்பிலாஷ்ப்ரூஃப் நானோ கோட்டிங், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 4.0, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.
ரெட்மி நோட் 7எஸ் சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்
- அட்ரினோ 512 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, 1/2" சாம்சங் GMI சென்சார், 6P லென்ஸ், PDAF, EIS
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல்
- 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.12μm பிக்சல்
- கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
- ஸ்பிளாஷ் ப்ரூஃப்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- க்விக் சார்ஜ் 4
ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் ஆனிக்ஸ் பிளாக், சஃபையர் புளு மற்றும் ரூபி ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.10,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் மே 23 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன.
சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போனை சீனாவில் மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்தது. பின் இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்சமயம் புதிய சியோமி ஸ்மார்ட்போன் M1903C3EE / M1903C3EC மாடல் நம்பர்களில் சான்று பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 7ஏ என்ற பெயரில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் சீன வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகி வந்த நிலையில், தற்சமயம் ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களும் TENAA வலைதளத்தில் இடம்பெற்றிருக்கிறது.
அதன்படி ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 5.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சியோமி ரெட்மி 7ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்
- 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதைத் தொடர்ந்து ரெட்மி நோட் 7எஸ் என்ற ஸ்மார்ட்போனினை இந்தியாவில் மே 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக சியோமி அறிவித்து இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ரெட்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. அதில், ‘நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் 48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் இந்தியாவில் மே 20 ஆம் தேதி அறிமுகமாகிறது’ என தெரிவித்துள்ளது.
This is the #RedmiNote you've been waiting for! 👀#RedmiNote7S with a Super #48MP camera is coming on 20th May!
— Redmi India (@RedmiIndia) May 16, 2019
Know more: https://t.co/KMvcxG1eHb#48MPForEveryonepic.twitter.com/G5YQt2mO6h
ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை என்ற போதும், இதில் 48 எம்.பி. கேமரா வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. சியோமி சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. + 5 எம்.பி. பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79 பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இதுதவிர இந்த கேமராவின் ப்ரோ மோட் பயன்படுத்தி 48 எம்.பி. தரத்திலும் புகைப்படம் எடுக்க முடியும். இத்துடன் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா கேமராவும் 13 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக சியோமி நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவித்து இருந்தது. அந்த வகையில் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 7 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் FHD பிளஸ் ஆப்டிக் AMOLED நாட்ச் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 9.5 உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 16 எம்.பி. சோனி IMX471 செல்ஃபி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பேக், டால்பி அட்மோஸ் வசதி கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 7 சிறப்பம்சங்கள்:
- 6.41 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
- 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 9.5
- டூயல் சிம்
- 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.6, 1/2.25″, 0.8μm, OIS, EIS
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 1.12 µm, f/2.4
- 16 எம்.பி. சோனி IMX471 செல்ஃபி சென்சார், f/2.0, 1.0μm
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப்.-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மிரர் கிரே மற்றும் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.32,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரெட் மாடல் விலை ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் மாதத்தில் துவங்கும் என தெரிகிறது.
சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதற்குள் 20 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவம் தனது ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. கடந்த மாதம் சியோமி நிறுவனம் புதிய ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஒரு மாதத்தில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவித்து இருந்தது.
இந்நிலையில், சியோமி தற்சமயம் புதிய ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இருபது லட்சத்தை கடந்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இத்தனை ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் சேர்த்தது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய விற்பனை மைல்கல் அறிவிப்புடன் சியோமி புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது. அதன்படி 48 எம்.பி. கேமராவுடன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 12 எம்.பி. + 2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 13 எம்.பி. செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பிளாக், நெபுளா ரெட் மற்றும் நெப்டியூன் புளு நிறங்களில் கிடைக்கிறது.
ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.9,999 என்றும் 4 ஜி.பி. ரேம் + 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனிக்ஸ் பிளாக், சஃபையர் புளு, ரூபி ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்திருக்கிறது.
சாம்சங் நிறுவனம் 2018 கேலக்ஸி ஏ7 மற்றும் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. சத்தமில்லாமல் விலை குறைக்கப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களின் புதிய விலை அந்நிறுவன வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.25,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.28,990 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வேரியண்ட் ரூ.31,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.
கேலக்ஸி ஏ7 (2018) 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலும் ரூ.3000 விலை குறைக்கப்பட்டு ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது முன்னதாக ரூ.22,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமானது முதல் இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இரு ஸ்மார்ட்போன்களின் விலை ஏப்ரல் மாதத்தில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சியோமியின் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. #Redmi7
சியோமி நிறுவனம் தனது ரெட்மி 7 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த MIUI 10, 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டிருக்கும் ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் டூயல் கலர் ஃபினிஷ் மற்றும் அரோரா ஸ்மோக் வடிவமைப்பு, P2i வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
சியோமி ரெட்மி 7 சிறப்பம்சங்கள்:
- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.25um பிக்சல், f/2.2, PDAF
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
- ஸ்பிளாஷ் ரெசிஸ்டண்ட் (P2i நானோ கோட்டிங்)
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் காமெட் புளு, லூனார் ரெட் மற்றும் எக்லிப்ஸ் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் விலை ரூ.7,999 என்றும், 3 ஜி.பி. ரேம் விலை ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரெட்மி 7 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் அமேசான், Mi வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2019 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் 7 சீரிஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதியை பார்ப்போம். #OnePlus7
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் புதிய ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியா, அமெரிக்கா மற்றும் லண்டனில் மே மாதம் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
வெளியீட்டு தேதியுடன் புதிய ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் ஒன்றையும் ஒன்பிளஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் வளைந்த வடிவமைப்பு, மூன்று பிரைமரி கேமரா மற்றும் அலெர்ட் ஸ்லைடர் உள்ளிட்டவை வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.
ஒன்பிளஸ் 7 ப்ரோ / 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் 3120x2232 பிக்சல் குவாட் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம்.
புகைப்படம் எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.6 OIS, 8 எம்.பி. 3X சூம், 16 எம்.பி. 117° அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ராப் சார்ஜ் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
ஒன்பிளஸ் 7 மாடலில் 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, 3700 ம்.ஏ.ஹெச். பேட்டரி, 20 வாட் டேஷ் சார்ஜ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 7 புதிய டீசர் வீடியோவை கீழே காணலாம்..,
சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், ரெட்மி 7 வெளியீடு பற்றிய விவரம் வெளியாகியிருக்கிறது. #Xiaomi
சியோமி நிறுவனம் தனது ரெட்மி வை3 ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், இதே நிகழ்வில் சியோமி மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சியோமியின் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டரில் பதிவிட்ட தகவல்களில் 7 ஆம் எண்ணை குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் புதிய ரெட்மி வை சீரிஸ் மாடலுடன் ரெட்மி 7 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் ரெட்மி வை சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 70 லட்சம் யூனிட்கள் விற்பனையானதை சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பில் 7 என்ற எண் பெரிதாக குறிப்பிட்டு வை-க்கு பின் என்ன என்ற கேள்வியை கேட்டிருந்தார்.
ஏற்கனவே ரெட்மி 7 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்சமயம் மனு குமார் ஜெயின் ட்விட்டர் பதிவின் மூலம் ரெட்மி 7 வெளியீடு அதிகம் எதிர்பார்ர்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1520 பிக்சல் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 632 சிப்செட், 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படம் எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதுதவிர P2i சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
×
X