search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Redmi 7A"

    சியோமியின் ரெட்மி பிராண்டு வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போனை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்துள்ளது.



    சியோமியின் ரெட்மி பிராண்டு பட்ஜெட் பிரிவில் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

    புதிய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, ஏ.ஐ. அம்சங்கள், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    பாலிகார்பனைட் பாடி கொண்டிருக்கும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி ரெட்மி 7ஏ சிறப்பம்சங்கள்

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
    - அட்ரினோ 505 GPU
    - 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i நானோ கோட்டிங்)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மே 28 ஆம் தேதி நடைபெறும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்படும்.
    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன.



    சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போனை சீனாவில் மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்தது. பின் இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    தற்சமயம் புதிய சியோமி ஸ்மார்ட்போன் M1903C3EE / M1903C3EC மாடல் நம்பர்களில் சான்று பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 7ஏ என்ற பெயரில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த வகையில் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் சீன வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகி வந்த நிலையில், தற்சமயம் ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களும் TENAA வலைதளத்தில் இடம்பெற்றிருக்கிறது.

    அதன்படி ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 5.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 



    சியோமி ரெட்மி 7ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்
    - 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி 
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    ×