search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    48 எம்.பி. கேமராவுடன் விரைவில் இந்தியா வரும் புதிய சியோமி ஸ்மார்ட்போன்
    X

    48 எம்.பி. கேமராவுடன் விரைவில் இந்தியா வரும் புதிய சியோமி ஸ்மார்ட்போன்

    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.



    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதைத் தொடர்ந்து ரெட்மி நோட் 7எஸ் என்ற ஸ்மார்ட்போனினை இந்தியாவில் மே 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக சியோமி அறிவித்து இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ரெட்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. அதில், ‘நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் 48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் இந்தியாவில் மே 20 ஆம் தேதி அறிமுகமாகிறது’ என தெரிவித்துள்ளது. 



    ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை என்ற போதும், இதில் 48 எம்.பி. கேமரா வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. சியோமி சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. + 5 எம்.பி. பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79 பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இதுதவிர இந்த கேமராவின் ப்ரோ மோட் பயன்படுத்தி 48 எம்.பி. தரத்திலும் புகைப்படம் எடுக்க முடியும். இத்துடன் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா கேமராவும் 13 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

    முன்னதாக சியோமி நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவித்து இருந்தது. அந்த வகையில் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
    Next Story
    ×