search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Redmi Note 7 Pro"

    சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதற்குள் 20 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    சியோமி நிறுவம் தனது ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. கடந்த மாதம் சியோமி நிறுவனம் புதிய ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஒரு மாதத்தில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவித்து இருந்தது.

    இந்நிலையில், சியோமி தற்சமயம் புதிய ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இருபது லட்சத்தை கடந்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இத்தனை ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் சேர்த்தது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



    புதிய விற்பனை மைல்கல் அறிவிப்புடன் சியோமி புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது. அதன்படி 48 எம்.பி. கேமராவுடன் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 12 எம்.பி. + 2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 13 எம்.பி. செல்ஃபி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பிளாக், நெபுளா ரெட் மற்றும் நெப்டியூன் புளு நிறங்களில் கிடைக்கிறது.

    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.9,999 என்றும் 4 ஜி.பி. ரேம் + 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனிக்ஸ் பிளாக், சஃபையர் புளு, ரூபி ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
    சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி ஸ்மார்ட்போன்கள் ஒரே மாதத்தில் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. #RedmiNote7



    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் முதல் முறையாக நேற்று விற்பனை செய்யப்பட்டது. 

    இரு ஸ்மார்ட்போன்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்ததால், பல வாரங்களாக இவை ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பத்து லட்சம் பேர் வாங்கியிருப்பதாக சியோமி இந்தியா தெரிவித்துள்ளது.



    இத்தனை யூனிட்கள் விற்பனையை சியோமி ஒரே மாதத்தில் பெற்றிருக்கிறது. பத்து லட்சம் யூனிட்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையை சேர்த்ததாகும். ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் மற்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 12 எம்.பி. + 2 எம்.பி. பிரைமரி கேமராக்கள், எல்.இ.டி. ஃபிளாஷ், 13 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.

    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 + 5 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 



    தோற்றத்தில் ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. இந்தியாவில் ரெட்மி நோட் 7 ப்ரோ 4 ஜி.பி. வேரியண்ட் ரூ.13,999 விலையிலும், 6 ஜி.பி. ரேம் வேரியண்ட் ரூ.16,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பிளாக், நெபுளா ரெட் மற்றும் நெப்டியூன் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 

    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம் வேரியண்ட் ரூ.9,999 விலையிலும் 4 ஜி.பி. ரேம் வேரியண்ட் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனிக்ஸ் பிளாக், சஃபையர் புளு மற்றும் ரூபி ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. #RedmiNote7 #Smartphone



    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்ப்டடுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை, MIUI 10 யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டு இயங்குகிறது. 

    புகைப்படங்களை எடுக்க ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை மற்றும் ஏ.ஐ. போர்டிரெயிட் அம்சம் மற்றும் ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    ரெட்மி நோட் 7 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
    - அட்ரினோ 612 GPU
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX586, 6P லென்ஸ், PDAF, EIS
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
    - ஸ்பிளாஷ் ப்ரூஃப்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - க்விக் சார்ஜ் 4

    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் மற்றும் MIUI 10 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா சோனி IMX486 சென்சார், f/2.2, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.



    ரெட்மி நோட் 7 சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, சோனி IMX486, 1.25um, PDAF, f/2.2
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
    - ஸ்பிளாஷ் ப்ரூஃப்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்மார்ட் பி.ஏ. TAS2563
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - க்விக் சார்ஜ் 4

    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் நெப்டியூன் புளு, நெபுளா ரெட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.13,999 என்றும், 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைதளங்களில் மார்ச் 13 ஆம் தேதி முதல் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் ஆனிக்ஸ் பிளாக், ரூபி ரெட் மற்றும் சஃபையர் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.9,999 என்றும் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் Mi ஹோம் விற்பனையகங்களில் மார்ச் 6 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #RedmiNote7Pro #Smartphone



    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் கடந்த வாரம் சீனாவில் அறிமுகமானதை தொடர்ந்து விரைவில் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளன. ரெட்மி நோட் 7 அறிமுக விழாவிலேயே ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என ரெட்மி அறிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    மேலும் ரெட்மி நோட் 7 போன்றே புதிய நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது. சமீபத்தில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் டீசர் சீனாவின் வெய்போ தளத்தில் லீக் ஆனது. அதில் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி சென்சார் வழங்கப்படுகிறது. 

    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சாம்சங் ISOCELL GM1 சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 7 ப்ரோ இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது.



    முன்னதாக குவால்காம் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இத்துடன் ஆக்டா-கோர் க்ரியோ 675 சி.பி.யு. மற்றும் அட்ரினோ 612 GPU வழங்கப்படுகிறது. புதிய பிராசஸர் ஸ்னாப்டிராகன் 670 சிப்செட்டின் மேம்பட்ட வடிவில் 11 என்.எம். தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கிறது. 

    இந்த பிராசஸரில் குவால்காமின் க்விக் சார்ஜ் 4 பிளஸ் தொழில்நுட்பத்திற்கான வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் அல்ட்ரா-ஹெச்.டி. (4K @ 30fps) தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் வசதியும் உள்ளது. 

    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 1499 (இந்திய மதிப்பில் ரூ.15,800) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை CNY 999 (இந்திய மதிப்பில் ரூ.10,500) என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் CNY1199 (இந்திய மதிப்பில் ரூ.12,600) என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை CNY 1399 (இந்திய மதிப்பில் ரூ.14,700) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×