என் மலர்

  தொழில்நுட்பம்

  இந்தியாவில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு
  X

  இந்தியாவில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்திருக்கிறது.  சாம்சங் நிறுவனம் 2018 கேலக்ஸி ஏ7 மற்றும் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. சத்தமில்லாமல் விலை குறைக்கப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களின் புதிய விலை அந்நிறுவன வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

  அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.25,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.28,990 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வேரியண்ட் ரூ.31,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.  கேலக்ஸி ஏ7 (2018) 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலும் ரூ.3000 விலை குறைக்கப்பட்டு ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது முன்னதாக ரூ.22,990 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

  இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமானது முதல் இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இரு ஸ்மார்ட்போன்களின் விலை ஏப்ரல் மாதத்தில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×