search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்
    X

    சமீபத்தில் அறிமுகமான சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை விரைவில் நிறுத்தம்

    சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போனின் விற்பனையை விரைவில் நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சியோமி நிறுவனம் 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் சீனாவில் ஏற்கனவே அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 மாடல் ஆகும்.

    இந்நிலையில், சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 7 மாடலின் விற்பனையை விரைவில் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. ரெட்மி நோட் 7 மாடலுக்கு மாற்றாக புதிய ரெட்மி நோட் 7எஸ் இருக்கும்.



    ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்களின் தோற்றத்தில் பின்புற டூயல் கேமரா செட்டப் தவிர வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. 1/2″ சாம்சங் ISOCELL பிரைட் GM1 சென்சார் மற்றும் 5 எம்.பி. இரண்டாவது கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 12 எம்.பி. சோனி IMX486 சென்சார் கொண்ட பிரைமரி கேமரா, f/2.2  மற்றும் 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி இந்தியா ஆன்லைன் விற்பனை பிரிவு தலைவர் ரகு ரெட்டி, இந்தியாவில் ரெட்மி நோட் 7 விற்பனை நிறுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். எனினும், விற்பனை நிறுத்தத்திற்கு சரியான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் கடந்த மாதம் முதல் ரெட்மி நோட் 7 ஓபன் சேல் நடைபெறுகிறது.

    ப்ளிப்கார்ட் மற்றும் Mi வலைதளங்களில் ரெட்மி நோட் 7 அதிகளவு வரவேற்பு பெற்று வருவதால், ஸ்டாக் இருக்கும் வரை ரெட்மி நோட் 7 விற்பனையை நடத்த சியோமி திட்டமிட்டுள்ளது. அதன் பின் அடுத்த வாரம் முதல் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கும் என தெரிகிறது.

    ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, P2i நானோ கோட்டிங், பின்புறம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 4.0, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×