என் மலர்

  தொழில்நுட்பம்

  இந்தியாவில் 5ஜி சோதனையை துவங்கும் ஒன்பிளஸ்
  X

  இந்தியாவில் 5ஜி சோதனையை துவங்கும் ஒன்பிளஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனையை குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து துவங்க இருக்கிறது. #OnePlus #5G  ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனைகளை துவங்க இருக்கிறது. இதற்கென ஒன்பிளஸ் நிறுவனம் குவால்காமுடன் இணைந்திருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ப்ரோடோடைப் சாதனத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்தது.

  இத்துடன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் வெளியாகும் என அறிவித்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 5ஜி சேவை வழங்கும் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாகவும், இது 5ஜி வசதி கொண்ட சாதனங்களில் முதன்மையாதாக இருக்கும் ஒன்பிளஸ் அறிவித்திருந்தது.  குவால்காமின் 800 சீரிஸ் ஸ்னாப்டிராகன் பிராசஸர்களை எங்களின் முதல் தலைமுறை சாதனத்தில் இருந்து தொடர்ச்சியாக வழங்கி வருகிறோம். இந்த கூட்டனியின் மூலம் உலகிற்கு மிகச்சிறப்பான 5ஜி சாதனத்தை கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது என ஒன்பிளஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

  இதுதவிர ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில 5ஜி வசதி வழங்கப்படாது என்றும், 5ஜி சேவைக்கென புதிய சாதனம் அறிமுகமாகும் என ஒன்பிளஸ் அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களிலும் ஒன்பிளஸ் நிறுவனம் 5ஜி சேவைக்கென தனி சாதனங்களை அறிமுகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

  5ஜி சேவைக்கான கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதாசாதனத்தின் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. 5ஜி சேவைக்கென தனி சாதனங்களை அறிமுகம் செய்வதன் மூலம் 5ஜி இல்லாத சாதனங்களை தற்போதைய வழக்கத்தை மாற்றாமல், குறைந்த விலையில் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய முடியும்.
  Next Story
  ×