search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஏ.ஐ. மற்றும் கேமிங் வசதிகள் நிறைந்த புதிய குவால்காம் பிராசஸர்கள் அறிமுகம்
    X

    ஏ.ஐ. மற்றும் கேமிங் வசதிகள் நிறைந்த புதிய குவால்காம் பிராசஸர்கள் அறிமுகம்

    குவால்காம் நிறுவனம் புதிதாக மொபைல் பிராசஸர்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் ஏ.ஐ., கேமரா மற்றும் கேமிங் வசதிகள் அதிகளவு மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. #Qualcomm



    குவால்காம் நிறுவனம் புதிய வகை மொபைல் பிராசஸர்களை அறிமுகம் செய்துள்ளது. இவை ஸ்னாப்டிராகன் 665, ஸ்னாப்டிராகன் 730 மற்றும் ஸ்னாப்டிராகன் 730ஜி என அழைக்கப்படுகின்றன.

    புதிய ஸ்னாப்டிராகன் மொபைல் பிராசஸர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), கேமரா மற்றும் கேமிங் உள்ளிட்ட அம்சங்களில் அதிகளவு மேம்படுத்தப்பட்டுள்ளன. ஸ்னாப்டிராகன் 665 மற்றும் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்கள் அதிகளவு பயன்பாட்டிற்கென உருவாக்கப்பட்டிருக்கிறது. 



    ஸ்னாப்டிராகன் 730ஜி கேமிங் வசதியை வழங்கும் நோக்கில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்னாப்டிராகன் 665, ஸ்னாப்டிராகன் 770 மற்றும் ஸ்னாப்டிராகன் 730ஜி உள்ளிட்டவற்றில் ஏ.ஐ. வசதி குவால்காம் ஏ.ஐ. என்ஜின் வேரியன்ட் மற்றும் ஹெக்சகன் வெக்டார் எக்ஸ்டென்ஷன்களின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

    புதிய பிராசஸர்களில் குவால்காம் நிறுவனம் மல்டி-கேமரா வசதி மற்றும் பல்வேறு இதர கேமரா ஆப்ஷன்களும் சேர்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 665, ஸ்னாப்டிராகன் 730 மற்றும் ஸ்னாப்டிராகன் 730ஜி உள்ளிட்டவை ஏற்கனவே வணிக ரீதியில் தயாராகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் புதிய குவால்காம் பிராசஸர்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் 2019 அரையாண்டு காலத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×