என் மலர்

  செய்திகள்

  நீதிமன்ற உத்தரவு - அவசர கதியில் ஐபோன் அப்டேட் வழங்கும் ஆப்பிள்
  X

  நீதிமன்ற உத்தரவு - அவசர கதியில் ஐபோன் அப்டேட் வழங்கும் ஆப்பிள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபோன் விற்பனைக்கான தடையை தவிர்க்க ஆப்பிள் நிறுவனம் சீன ஐபோன் மாடல்களுக்கு அப்டேட் வழங்க முடிவு செய்துள்ளது. #Apple  சீனாவில் உள்ள ஐபோன்களுக்கு அப்டேட் வழங்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சீனாவில் ஐபோன்களின் விற்பனைக்கு குவால்காம் நிறுவனம் தடைக் கோரி வழக்கு தொடர்ந்து இருந்தது. இதைத் தொடர்ந்து சீன நீதிமன்றம் ஐபோன் விற்பனைக்கு தடை விதித்தது.

  அந்த வகையில் சீன விற்பனைக்கான தடையை தவிர்க்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுக்கு மென்பொருள் அப்டேட் வழங்குகிறது. புதிய அப்டேட் மூலம் ஐபோன்களின் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாத வகையில் இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

  இவ்வாறு பயனர்கள் தங்களது ஐபோன்களை அப்டேட் செய்யும் போது செயலிகளிடையே மாறும் விதம், அளவு மற்றும் புகைப்படங்களின் தோற்றம் உள்ளிட்டவை மாறியிருப்பதை கவனிக்க முடியும். ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் உலகம் முழுக்க ஒவ்வொருத்தரை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கின்றன.  பல கோடி டாலர்கள் நஷ்ட ஈடு கேட்டு இருதரப்பில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் இருதரப்புக்கும் வெற்றி, தோல்விகள் கிடைத்திருக்கின்றன. அந்த வகையில் குவால்காமின் சமீபத்திய வழக்கில் சீன நீதிமன்றம் தேர்வு செய்யப்பட்ட சில ஐபோன் மாடல்களின் விற்பனைக்கு தடை விதித்தது.

  எனினும், ஆப்பிள் தொடர்ந்து தனது ஐபோன் மாடல்களை சீனாவில் தொடர்ந்து விற்பனை செய்கிறது.

  “ஆப்பிள் நீதிமன்ற உத்தரவை மீறுகிறது. சட்ட ரீதியாக ஐபோன்களின் விற்பனையை நிறுத்த வேண்டும், விற்பனைக்கு எவ்வித சலுகைகளையும் வழங்கக் கூடாது, உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் மாடல்களை இறக்குமதி செய்யக் கூடாது,” என குவால்காம் நிறுவனத்தின் துணை தலைவர் டான் ரோசென்பர்க் தெரிவித்தார். 

  சீன நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து, ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் குவால்காம் நிறுவனம் ஏற்கனவே சர்வதேச நீதிமன்றத்தால் செல்லாது என அறிவிக்கப்பட்ட காப்புரிமைகளுக்கு உரிமை கொண்டாட முயற்சிப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
  Next Story
  ×