search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் ஆப்பிள்
    X

    மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் ஆப்பிள்

    ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பது சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. #Apple #foldablesmartphone



    சாம்சங், சியோமி, ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. அந்நிறுவனம் பதிவு செய்திருந்த காப்புரிமையில் இந்த தகவல் கிடைத்துள்ளது.

    2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு பின் 2016 ஆம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட வடிவங்களில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஐபோனினை ஆப்பிள் உருவாக்க இருப்பதாக தெரிகிறது. பிப்ரவரி 20 ஆம் தேதி சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களுடன் சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் காப்புரிமையின் படி புதிய போன் பாதியாக மடிக்கக்கூடியதாக இருக்கும் என தெரிகிறது. முன்னதாக இதேபோன்ற வடிவமைப்பு மோட்டோரோலா பதிவு செய்திருந்த காப்புரிமையில் காணப்பட்டது.



    புகைப்படம் நன்றி: uspto

    சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் விரிக்கப்பட்ட நிலையில், டேப்லெட் போன்று பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் நிலையில், ஆப்பிள் வடிவமைப்பில் வளையக்கூடிய OLED டிஸ்ப்ளே போனினை வளையச் செய்யும் என தெரிகிறது. வரைபடங்களில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்கள் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மடிக்கக்கூடியதாக இருக்கிறது. 

    அந்த வகையில் புதிய சாதனத்தை மேக்புக் அல்லது ஐபேட் போன்று இருக்கும் என தெரிகிறது. ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகள் வெளியாகியிருப்பதால் மடிக்கக்கூடிய ஐபோன்கள் இந்த ஆண்டே அறிமுகமாகும் என எதிர்பார்க்க முடியாது. ஆப்பிள் மடிக்கக்கூடிய சாதனம் பற்றிய புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகலாம்.
    Next Story
    ×