search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "foldable phone"

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவு வெளியாகி உள்ளது.
    • புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியான நிலையில், இது ஒன்பிளஸ் போல்டு அல்லது ஒன்பிளஸ் V போல்டு போன்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

    எனினும், சமீபத்திய தகவல்களில் இந்த மாடல் ஒன்பிளஸ் ஒபன் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் ஒபன் தான் அந்நிறுவனத்தின் முதல் மடிக்ககூடிய ஸ்மார்ட்போனின் பெயராக இருக்கும் என்று கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

     

    அதில் "We OPEN when others FOLD" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சாம்சங் நிறுவனம் தென்கொரியாவில் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், ஒன்பிளஸ் இந்த பதிவை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஒபன் பெயரில் அறிமுகமாகும் என்று உறுதியாகி இருக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இதன் வெளியீடு அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலுடன் ஒன்பிளஸ் நார்டு CE 3 மற்றும் ஏஸ் 2 ப்ரோ மாடல்களும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    • மோட்டோ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம்.
    • புதிய மோட்டோ ஃபோல்டபில் போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒருவழியாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஜூலை மாத துவக்கத்தில் மோட்டோ ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன. புதிய ஸ்மார்ட்போன்கள் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.

    புதிய ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் அமேசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியாகி உள்ளது. மோட்டோ ரேசர் 40 மற்றும் மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் ஜூலை 4-ம் தேதி இந்யாவில் அறிமுகமாகின்றன. அறிமுக நிகழ்வு ஜூலை 4, மாலை 6 மணிக்கு துவங்குகிறது. இரு ஸ்மார்ட்போன்களுக்கான டீசர்களை மோட்டோரோலா வெளியிட்டு உள்ளது.

     

     மோட்டோ ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சீனா மற்றும் வட அமெரிக்கா பகுதிகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடலில் 3.6 இன்ச் pOLED டிஸ்ப்ளே, 144 Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 6.9 இன்ச் FHD+ pOLED டிஸ்ப்ளே, 165Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது.

    மோட்டோ ரேசர் 40 மாடலில் சற்றே சிறிய 1.47 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே, AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, உள்புறத்தில் 6.9 இன்ச் FHD+ pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இத்துடன் மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடலில் குவாலகாம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரும், ரேசர் 40 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரு மாடல்களிலும் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம், மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடல் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. ரேசர் 40 மாடலில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பது சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. #Apple #foldablesmartphone



    சாம்சங், சியோமி, ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. அந்நிறுவனம் பதிவு செய்திருந்த காப்புரிமையில் இந்த தகவல் கிடைத்துள்ளது.

    2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு பின் 2016 ஆம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட வடிவங்களில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஐபோனினை ஆப்பிள் உருவாக்க இருப்பதாக தெரிகிறது. பிப்ரவரி 20 ஆம் தேதி சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களுடன் சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் காப்புரிமையின் படி புதிய போன் பாதியாக மடிக்கக்கூடியதாக இருக்கும் என தெரிகிறது. முன்னதாக இதேபோன்ற வடிவமைப்பு மோட்டோரோலா பதிவு செய்திருந்த காப்புரிமையில் காணப்பட்டது.



    புகைப்படம் நன்றி: uspto

    சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் விரிக்கப்பட்ட நிலையில், டேப்லெட் போன்று பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் நிலையில், ஆப்பிள் வடிவமைப்பில் வளையக்கூடிய OLED டிஸ்ப்ளே போனினை வளையச் செய்யும் என தெரிகிறது. வரைபடங்களில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்கள் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மடிக்கக்கூடியதாக இருக்கிறது. 

    அந்த வகையில் புதிய சாதனத்தை மேக்புக் அல்லது ஐபேட் போன்று இருக்கும் என தெரிகிறது. ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகள் வெளியாகியிருப்பதால் மடிக்கக்கூடிய ஐபோன்கள் இந்த ஆண்டே அறிமுகமாகும் என எதிர்பார்க்க முடியாது. ஆப்பிள் மடிக்கக்கூடிய சாதனம் பற்றிய புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகலாம்.
    ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களை போன்று இன்டெல் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Intel #FoldablePhone



    இன்டெல் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சாம்சங், ஹூவாய், எல்.ஜி., சியோமி என பல்வேறு நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகின்றன.

    சர்வதேச காப்புரிமை அலுவலகம் மற்றும் அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் இன்டெல் பதிவு செய்திருக்கும் விண்ணப்பத்தில் இன்டெல் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் பெரிய திரை கொண்ட டேப்லெட் போன்று காட்சியளிக்கிறது. இன்டெல் புதிய சாதனத்தில் மொத்தம் மூன்று டிஸ்ப்ளேக்கள் இடம்பெற்றுள்ளன.

    இன்டெல் கார்ப்பரேஷன் சார்பில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை லெட்ஸ்கோடிஜிட்டல் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்டெல் காப்புரிமை விண்ணப்பத்தின் தலைப்பு மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே பேனல்கள் கொண்ட மின்சாதம் என வைக்கப்பட்டிருக்கிறது. காப்புரிமை விவரங்களின் படி முழுமையாக மடிக்கப்பட்ட நிலையில், இந்த சாதனத்தை ஸ்மார்ட்போன் போன்று பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: LetsGoDigital

    இந்த சாதனத்தில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, சுற்றிலும் பெசல்கள் இல்லாமல், கேமரா, சென்சார்கள் மற்றும் ரிசீவர்கள் டிஸ்ப்ளேவின் கீழ் பொருத்தப்படுகிறது. ஸ்மார்ட்போனினை இருமுறை திறந்தால், பெரிய டேப்லெட் போன்று பயன்படுத்தலாம். இருமுறை மடிக்கக்கூடிய வகையில் உருவாவதால் இந்த ஸ்மார்ட்போன் அதிக தடிமனாக இருக்கும் என தெரிகிறது.

    டேப்லெட் சாதனம் திறக்கப்பட்ட நிலையில் மூன்று டிஸ்ப்ளே பாகங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் இரண்டு கேமராக்கள் என மொத்தம் ஆறு கேமராக்கள் வழங்கப்படுகிறது. இந்த சாதனத்துடன் ஸ்டைலஸ் பென் ஒன்றும் வழங்கப்படுகிறது. இதனை மடிக்கக்கூடிய சாதனத்துடன் காந்தம் போன்று இணைத்து கொள்ளலாம்.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களை வைத்து பார்க்கும் போது இந்த மடிக்கக்கூடிய சாதனம் சந்தையில் அறிமுகமாக சிலகாலம் ஆகும் என்றே தெரிகிறது. #Intel #FoldablePhone
    மோட்டோரோலாவின் பிரபல மொபைல் போன்களில் ஒன்றாக இருந்த ரேசர்போன் மீண்டும் விற்பனைக்கு வரயிருக்கிறது. #Motorola



    மோட்டோரோலா நிறுவனத்தின் பிரபல மொபைல்களில் ஒன்றாக இருந்த ரேசர்போன் மீண்டும் விற்பனைக்கு வரயிருக்கிறது.

    மடிக்கக்கூடிய மோட்டோ மொபைல் போன் முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்றும் அடுத்த மாதம் விற்பனை துவங்கும் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஃபிளெக்ஸ்பை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை 1600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,12,000) வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், புதிய ரேசர் போனின் விலை 1500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,07,107) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    பிப்ரவரி 2018 இல் லெனோவோ தலைமை செயல் அதிகாரி ரேசர் போன் புதிய வெர்ஷனின் டீசரை வெளியிட்டிருந்தார். பின் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அந்நிறுவனம் பதிவு செய்திருந்த சில காப்புரிமைகளில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்ட ஃப்ளிப் போன் வெளியாகலாம் என கூறப்பட்டது.

    சி.இ.எஸ். 2019 விழாவில் சீன நிறுவனமான ராயல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. முன்னதாக 2018 ஆக்டோபரில் ஃபிளெக்ஸ்பை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் மடிக்கும் தன்மை கொண்ட AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டிருக்கிறது.

    இருவித மெமரி ஆப்ஷன்கள்: 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் வாட்டர் ஓ.எஸ். யு.ஐ. கொண்டிருக்கிறது. 7.8 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ஃபிளெக்ஸ்பை ஸ்மார்ட்போனில் 16 எம்.பி. மற்றும் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், டூயல் சிம் ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மார்ச் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #Samsung #Foldablephone



    சாம்சங் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் நடைபெற்ற சாம்சங் டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போனுடன் மார்ச் 2019ல் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் சீரிஸ் பிப்ரவரி 2019ல் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் 2019ம் ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் வெளியிடப்படலாம் என சாம்சங் நிறுவன தலைவர் கோ டாங் ஜின் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.



    மேலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் குறைந்தபட்சம் பத்து லட்சம் யூனிட்கள் வரை உற்பத்தி செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 2019 ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 5ஜி நெட்வொர்க் வசதி வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்படுகிறது. கேலக்ஸி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை 1,770 டாலர்கள் (ரூ.1,28,935) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் இது குறைந்த எண்ணிக்கையில் முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் உள்புற டிஸ்ப்ளே மற்றும் வெளிப்புறம் 4.6 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புதிய மடிக்கக்கூடிய சாதனம் செய்தியாளர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு வழங்கப்படவில்லை. புதிய சாதனத்தின் உற்பத்தி பணிகள் வரும் மாதங்களில் துவங்கும் என சாம்சங் தெரிவித்திருக்கிறது. 

    சீனாவில் ஹூவாய் டெக்னாலஜிஸ் கோ லிமிட்டெட் நிறுவனமும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
    உலகின் பிரபல மொபைல் நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வரும் நிலையில், எல்.ஜி. நிறுவனத்தின் மடிக்கக்கூடிய மொபைல் அறிமுகம் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #smartphone



    உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மடிக்கக்கூடிய மொபைல் போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. சாம்சங், ஹூவாய் போன்ற நிறுவனங்கள் விரைவில் தங்களது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் மடிக்கக்கூடிய மொபைல் போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்.ஜி. நிறுவனத்தின் மடிக்கக்கூடிய மொபைல் போன் 2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் சி.இ.எஸ். கீநோட் நிகழ்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.



    பிரபல ஸ்மார்ட்போன் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் புதிய தகவலை வழங்கியிருக்கிறார். எல்.ஜி. மடிக்கக்கூடிய மொபைல் போன் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், எல்.ஜி. நிறுவனம் புதிய மொபைல் போனினை சி.இ.எஸ். நிகழ்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சாம்சங் நிறுவனத்தை பொருத்த வரை பல்வேறு விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் சாம்சங் மடிக்கக்கூடிய மொபைல் போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    சமீபத்தில் சாம்சங் வெளியிட்ட தகவல்களில் மடிக்கக்கூடிய மொபைல் போனில் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. 

    சாம்சங் நிறுவனம் போன்றே ஹூவாய் நிறுவனமும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை 2019ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. எனினும் உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் நிறுவனம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இப்படியும் பயன்படுத்த முடியும் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். #smartphone



    சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் நிலையில், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் எஸ்.டி.சி. 2018 நிகழ்வில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்களை அந்நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான டி.ஜெ. கோ தெரிவித்துள்ளார். அதன்படி சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றும் பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். முன்னதாக வெளியான தகவல்களில் ஸ்மார்ட்போனில் செங்குத்தாக இருக்கும் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

    உள்புறமாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் டிஸ்ப்ளே முழுமையாக மறைக்கப்படும். புதிய ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் பிரைமரி OLED டிஸ்ப்ளே மற்றும் 4.6 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. டிஸ்ப்ளே அம்சங்கள் குறித்த விவரங்களை கோ தெரிவிக்காத நிலையில், ஸ்மார்ட்போனினை டேப்லெட் போன்று பயன்படுத்த முடியும் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

    "மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வழங்கும் போது, அது உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு பயன்தரும் வகையில் இருக்க வேண்டும்," என அவர் தெரிவித்தார். "பயனர் அனுபவத்தை மேம்படுத்தாது என்றால், இது போன்ற பொருட்களை வழங்க விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்."

    "மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான தேவை இருப்பதை நான் நம்புகிறேன், நாம் மடிக்கக்கூடிய மொபைல் போன்களை வழங்கும் போது, இது சந்தையில் புதிதாக இருக்கும், நிச்சம் இதேபோன்ற மாடல்கள் அதிகம் வெளியாகும்" என டி.ஜெ. கோ தெரிவித்தார்.
    ×