search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இப்படியும் இயங்கும் - சி.இ.ஒ. தகவல்
    X

    சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இப்படியும் இயங்கும் - சி.இ.ஒ. தகவல்

    சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இப்படியும் பயன்படுத்த முடியும் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். #smartphone



    சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் நிலையில், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் எஸ்.டி.சி. 2018 நிகழ்வில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்களை அந்நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான டி.ஜெ. கோ தெரிவித்துள்ளார். அதன்படி சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்றும் பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். முன்னதாக வெளியான தகவல்களில் ஸ்மார்ட்போனில் செங்குத்தாக இருக்கும் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

    உள்புறமாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் டிஸ்ப்ளே முழுமையாக மறைக்கப்படும். புதிய ஸ்மார்ட்போனில் 7.3 இன்ச் பிரைமரி OLED டிஸ்ப்ளே மற்றும் 4.6 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. டிஸ்ப்ளே அம்சங்கள் குறித்த விவரங்களை கோ தெரிவிக்காத நிலையில், ஸ்மார்ட்போனினை டேப்லெட் போன்று பயன்படுத்த முடியும் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

    "மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வழங்கும் போது, அது உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு பயன்தரும் வகையில் இருக்க வேண்டும்," என அவர் தெரிவித்தார். "பயனர் அனுபவத்தை மேம்படுத்தாது என்றால், இது போன்ற பொருட்களை வழங்க விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்."

    "மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான தேவை இருப்பதை நான் நம்புகிறேன், நாம் மடிக்கக்கூடிய மொபைல் போன்களை வழங்கும் போது, இது சந்தையில் புதிதாக இருக்கும், நிச்சம் இதேபோன்ற மாடல்கள் அதிகம் வெளியாகும்" என டி.ஜெ. கோ தெரிவித்தார்.
    Next Story
    ×