ஒன்பிளஸ்-இன் போல்டபில் போன் பெயர் இது தான்.. சூப்பர் டீசர் வெளியீடு..!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவு வெளியாகி உள்ளது. புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
ஒன்பிளஸ்-இன் போல்டபில் போன் பெயர் இது தான்.. சூப்பர் டீசர் வெளியீடு..!
Published on

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியான நிலையில், இது ஒன்பிளஸ் போல்டு அல்லது ஒன்பிளஸ் V போல்டு போன்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

எனினும், சமீபத்திய தகவல்களில் இந்த மாடல் ஒன்பிளஸ் ஒபன் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் ஒபன் தான் அந்நிறுவனத்தின் முதல் மடிக்ககூடிய ஸ்மார்ட்போனின் பெயராக இருக்கும் என்று கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் "We OPEN when others FOLD" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சாம்சங் நிறுவனம் தென்கொரியாவில் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், ஒன்பிளஸ் இந்த பதிவை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஒபன் பெயரில் அறிமுகமாகும் என்று உறுதியாகி இருக்கிறது.

புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இதன் வெளியீடு அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலுடன் ஒன்பிளஸ் நார்டு CE 3 மற்றும் ஏஸ் 2 ப்ரோ மாடல்களும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com