search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போல்டபில் போன்"

    • இந்த ஸ்மார்ட்போன் இதே பெயரில் தான் விற்பனைக்கு வரும்.
    • இந்த ஸ்மார்ட்போன் கொமெட் என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது.

    கூகுள் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் 9 ப்ரோ போல்டு எனும் பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதே பெயரில் தான் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனம் 2024 ஆண்டு வெளியாகும் பிக்சல் சாதனங்களின் பெயரை மாற்ற இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி பிக்சல் 9 மாடல் டோகே எனும் குறியீட்டு பெயரிலும், பிக்சல் 9 ப்ரோ கைமேன் என்ற பெயரிலும், பிக்சல் 9 ப்ரோ XL மாடல் கொமோடோ என்ற பெயரிலும் பிக்சல் 9 ப்ரோ போல்டு மாடல் கொமெட் என்ற பெயரிலும் உருவாக்கப்படுகிறது.

    முன்னதாக கொமெட் பெயரில் உருவாக்கப்படும் ஸ்மார்ட்போன் பிக்சல் போல்டு 2 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. தற்போது இந்த சாதனம் பிக்சல் 9 ப்ரோ போல்டு பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

    பெயரிடும் வழக்கத்தை கூகுள் மாற்றும் பட்சத்தில், அந்நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் 9 சீரிசில் இணைக்கப்படும். இது சாத்தியமாகும் படச்த்தில் பிக்சல் போல்டபில் சாதனங்களில் குறிப்பிடத்தக்க மாற்றமாக அமையும். 

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவு வெளியாகி உள்ளது.
    • புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியான நிலையில், இது ஒன்பிளஸ் போல்டு அல்லது ஒன்பிளஸ் V போல்டு போன்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

    எனினும், சமீபத்திய தகவல்களில் இந்த மாடல் ஒன்பிளஸ் ஒபன் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் ஒபன் தான் அந்நிறுவனத்தின் முதல் மடிக்ககூடிய ஸ்மார்ட்போனின் பெயராக இருக்கும் என்று கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

     

    அதில் "We OPEN when others FOLD" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சாம்சங் நிறுவனம் தென்கொரியாவில் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், ஒன்பிளஸ் இந்த பதிவை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஒபன் பெயரில் அறிமுகமாகும் என்று உறுதியாகி இருக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இதன் வெளியீடு அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலுடன் ஒன்பிளஸ் நார்டு CE 3 மற்றும் ஏஸ் 2 ப்ரோ மாடல்களும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    ×