search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foldable Smartphone"

    • 4400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
    • இதில் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், இரு மாடல்களின் முன்பதிவு இந்திய சந்தையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி Z போல்டு 6 மாடலில் வெளிப்புறம் 7.6 இன்ச், உள்புறம் 6.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 12MP, 50MP மற்றும் 10MP பிரைமரி கேமரா சென்சார்கள், 10MP செல்பி கேமரா மற்றும் 4400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடலில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 12MP+50MP பிரைமரி கேமரா, 10MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    விலை விவரங்கள்:

    கேலக்ஸி Z ப்ளிப் 6 (12ஜிபி+256ஜிபி) ரூ. 1,09,999

    கேலக்ஸி Z ப்ளிப் 6 (12ஜிபி+512ஜிபி) ரூ. 1,21,999

    கேலக்ஸி Z போல்டு 6 (12ஜிபி+256ஜிபி) ரூ. 1,64,999

    கேலக்ஸி Z போல்டு 6 (12ஜிபி+512ஜிபி) ரூ. 1,76,999

    கேலக்ஸி Z போல்டு 6 (12ஜிபி+1டிபி) ரூ. 2,00,999

    புதிய கேலக்ஸி Z சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஜூலை 24 ஆம் தேதி துவங்குகிறது.

    • கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வு மாலை 6.30 மணிக்கு துவங்க இருக்கிறது.
    • கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ, கேலக்ஸி ரிங் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி இந்த ஆண்டின் இரண்டாவது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஜூலை 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது.

    வழக்கம்போல இந்த நிகழ்வும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளம், யூடியூப் சேல் உள்ளிட்டவைகளில் ஸ்டிரீம் செய்யப்படும். இந்திய நேரப்படி கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வு மாலை 6.30 மணிக்கு துவங்க இருக்கிறது.

     


    இந்த நிகழ்ச்சியில் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 6, கேலக்ஸி Z ப்ளிப் 6, கேலக்ஸி வாட்ச் 7, கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா, கேலக்ஸி பட்ஸ் 3, கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ, கேலக்ஸி ரிங் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது.

    கேலக்ஸி ரிங் மாடல் இந்திய சந்தையில் ரூ. 35 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதில் உடல் ஆரோக்கியத்தை டிராக் செய்யும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் ப்ளூடூத் 5.4 மற்றும் ஒன்பது வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • மற்றொரு நிகழ்வில் மடிக்கக்கூடிய சாதனங்களையும் அறிமுகம் செய்கிறது.
    • சற்றே குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்.

    சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களை கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ஆண்டிற்கு இருமுறை நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு விழாவில்- ஒருமுறை சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களும், மற்றொரு நிகழ்வில் மடிக்கக்கூடிய சாதனங்களையும் அறிமுகம் செய்து வருகிறது.

    இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில், இந்த ஆண்டிற்கான அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஜூலை 10 ஆம் தேதி பாரிஸ் நகரில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரப்பூர்வ பார்டனராக சாம்சங் நிறுவனம் இருக்கிறது. அந்த வகையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இரு வாரங்களுக்கு முன்பு கேலக்ஸி அன்பேக்டு நிகவ்வை நடத்த சாம்சங் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    சாம்சங்கின் இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இந்த முறை வழக்கமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் தவிர கேலக்ஸி Z ஃபோல்டு FE மற்றும் Z ஃப்ளிப் FE மாடல்கள் சற்றே குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவற்றுடன் கேலக்ஸி ரிங் சாதனத்தின் விலை விவரங்கள் இந்த நிகழ்வில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக இந்த சாதனம் கேலக்ஸி S24 அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்பட்டு, 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் ப்ளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது.

    விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய X போல்டு 3 ப்ரோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஜூன் 6 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக மார்ச் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியா வரவிருக்கிறது.

    புதிய விவோ X போல்டு 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், செய்ஸ் பிராண்டு கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் உள்புறம் 8 இன்ச் அளவில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

     


    இந்தியாவில் விவோ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக விவோ X போல்டு 3 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவோ இந்தியா மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    சீனாவில் விவோ X போல்டு 3 ப்ரோ மாடலின் விலை CNY 9,999 இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் இந்திய விலை ரூ. 1 லட்சம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது விவோ தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சீனாவில் மட்டுமே விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



    • சியோமி மிக்ஸ் ப்ளிப் போனின் புகைப்படங்கள் லீக்.
    • ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படலாம்.

    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ப்ளிப் போன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது வாடிக்கையான விஷயம் தான். அந்த வரிசையில் சியோமி மிக்ஸ் ப்ளிப் போனின் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது.

    இதில் ஸ்மார்ட்போனின் டிசைன் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. மேலும், இதே ஸ்மார்ட்போன் 3C சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     


    சீன வலைதளமான வெய்போவில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி சியோமி மிக்ஸ் ப்ளிப் போனின் பேக் பேனலில் கவர் ஸ்கிரீன் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் இரட்டை கேமரா மாட்யுல், இரு எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்படுகிறது. மேலும், லெக்யா லோகோ இடம்பெற்று இருக்கிறது.

    புதிய மிக்ஸ் ப்ளிப் போன் கோல்டன் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இதன் கீழ்புறத்தில் சியோமி லோகோ இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2405CPX3DC மாடல் நம்பர் கொண்டுள்ளது. இதில் அதிகபட்சம் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி மிக்ஸ் ப்ளிப் போனில் 1.5K ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, ஆம்னிவிஷன் OV60A 1/2.8 இன்ச் சென்சார், 2x ஆப்டிக்கல் ஜூம் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்த மாடலில் 32MP செல்ஃபி கேமரா, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த ஸ்மார்ட்போன் இதே பெயரில் தான் விற்பனைக்கு வரும்.
    • இந்த ஸ்மார்ட்போன் கொமெட் என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது.

    கூகுள் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் 9 ப்ரோ போல்டு எனும் பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதே பெயரில் தான் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனம் 2024 ஆண்டு வெளியாகும் பிக்சல் சாதனங்களின் பெயரை மாற்ற இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி பிக்சல் 9 மாடல் டோகே எனும் குறியீட்டு பெயரிலும், பிக்சல் 9 ப்ரோ கைமேன் என்ற பெயரிலும், பிக்சல் 9 ப்ரோ XL மாடல் கொமோடோ என்ற பெயரிலும் பிக்சல் 9 ப்ரோ போல்டு மாடல் கொமெட் என்ற பெயரிலும் உருவாக்கப்படுகிறது.

    முன்னதாக கொமெட் பெயரில் உருவாக்கப்படும் ஸ்மார்ட்போன் பிக்சல் போல்டு 2 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. தற்போது இந்த சாதனம் பிக்சல் 9 ப்ரோ போல்டு பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

    பெயரிடும் வழக்கத்தை கூகுள் மாற்றும் பட்சத்தில், அந்நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் 9 சீரிசில் இணைக்கப்படும். இது சாத்தியமாகும் படச்த்தில் பிக்சல் போல்டபில் சாதனங்களில் குறிப்பிடத்தக்க மாற்றமாக அமையும். 

    • வேறுசில சாதனங்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
    • மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    ஹூவாய் நிறுவனம் விரைவில் தனது P70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு ஏற்கனவே சில முறை தாமதமாகிவிட்டது. இந்த நிலையில், ஹூவாய் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் மட்டுமின்றி வேறுசில சாதனங்களை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

    அந்த வகையில், ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மூன்று நிலைகளில் மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதுதவிர ஹூவாய் நிறுவனம் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும், இதற்கான பணிகள் முழுமை பெற்றுவிட்டதாகவும் சீன தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் Z அல்லது S வடிவில் மூன்றாக மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் அளவு 10 இன்ச் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஹூவாயின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு BOE பேனல்களை வினியோகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் ஹீன்ஜ் (கீல்) ஹௌலி மற்றும் ஃபுஸ்டா போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்வதாக தெரிகிறது. இந்த சாதனத்தை பெரியளவில் விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளில் ஹூவாய் ஈடுபட்டு வருகிறது.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஹூவாய் நிறுவனம் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் ஹூவாய் விஷன் ப்ரோ என்று அழைக்கப்பட இருக்கிறது. இதில் உள்ள டாப் எண்ட் பிராசஸர் பயனர்களுக்கு அசத்தலான அனுபவத்தை வழங்கும்.

    இந்த அணியக்கூடிய சாதனம் அதிநவீன கூலிங் மெக்கானிசம் கொண்டு, பரவலான மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்கள் ஏற்படுத்தும் வெப்ப உணர்வை தடுக்கும். புதிய மடிக்கக்கூடிய சாதனம் மற்றும் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் தொடர்பாக ஹூவாய் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களிடம் போட்டியை எதிர்கொள்கிறது.
    • குறைந்த விலையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் அன்பேக்டு நிகழ்ச்சியில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவு அதிக பிரபலம் அடைந்து வருகிறது. இதில் சாம்சங் நிறுவனம் ஹூவாய், ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களிடம் போட்டியை எதிர்கொள்கிறது.

    அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் புதிய சீரிசை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனம் இந்த முறை இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒதில் ஒன்று அல்ட்ரா பிரான்டிங் கொண்டிருக்கும் என்றும் மற்றொன்று குறைந்த விலையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

     


    கொரிய நிறுவனமான சிசா ஜர்னல் வெளியிட்டுள்ள தகவல்களில் சாம்சங் தனது குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை இந்த ஆண்டிலேயே அறிமுகம் செய்யும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் கேமரா தவிர மற்ற அம்சங்கள் பட்ஜெட் விலையில் இருக்கும் என்று தெரிகிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போனின் விலையை குறைவாக நிர்ணயிக்க முடியும்.

    விலையை பொருத்தவரை சாம்சங்கின் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 800 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 66 ஆயிரத்தில் இருந்து துவங்கும் என்று தெரிகிறது. இது தற்போது விற்பனை செய்யப்படும் கேலக்ஸி ஃபோல்டு 5 ஸ்மார்ட்போனின் விலையை விட 50 சதவீதம் குறைவு ஆகும்.

    • இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இதர சாதனங்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    விவோ நிறுவனத்தின் X ஃபோல்டு 3 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீரிசில் விவோ X ஃபோல்டு 3 மற்றும் விவோ X ஃபோல்டு 3 ப்ரோ என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பாக விவோ சீனா வலைதளம் மற்றும் வெய்போ பதிவுகளில் விவோ நிறுவனம் தனது விவோ X ஃபோல்டு 3 ஸ்மார்ட்போன்கள் மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறது. புது ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்களுடன் விவோ வாட்ச் 3, விவோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 4 மற்றும் விவோ பேட் 3 ப்ரோ உள்ளிட்ட சாதனங்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

     


    டீசர்களின் படி புதிய விவோ X ஃபோல்டு 3 மாடல்கள் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த மாடல்கள் இதுவரை வெளியானதில் குறைந்த எடை மற்றும் மிக மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படலாம்.

    இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒரிஜின் ஒ.எஸ். 4 வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 64MP பெரிஸ்கோப் கேமரா, OIS, 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 120 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • சியோமியின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 16 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தகவல்.
    • புதிய சியோமி ஸ்மார்ட்போன் 100 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கலாம்.

    சியோமி நிறுவனத்தின் மிக்ஸ் ஃபோல்டு 4 ஸ்மார்ட்போன் விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சியோமி மிக்ஸ் ஃபோல்டு 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இந்த மாடல் உருவாகி இருக்கிறது. புதிய மிக்ஸ் ஃபோல்டு 4 குறித்து சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில், புதிய சியோமி மிக்ஸ் ஃபோல்டு 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர், சார்ஜிங் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

     


    டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவல்களின்படி சியோமி மிக்ஸ் ஃபோல்டு 4 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 1 டி.பி. மெமரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மாடலின் கிரீஸ் முந்தைய மாடலை விட சிறியதாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க மிக்ஸ் ஃபோல்டு 4 மாடலில் 50MP பிரைமரி கேமரா, புதிதாக பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்படலாம். இத்துடன் இருவழி செயற்கைக்கோள் சார்ந்த தகவல் பரிமாற்ற வசதி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய மிக்ஸ் ஃபோல்டு 4 மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். ேட்டரி, 100 வாட் வயர்டு சார்ஜிங் வழங்கப்படலாம். 

    • மற்றொரு மாடல் விவரங்களும் இடம்பெற்றுள்ளது.
    • கேலக்ஸி Z ஃபோல்டு 6 சீரிஸ்-உடன் அறிமுகம் செய்யப்படலாம்.

    சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், இந்த கேலக்ஸி Z ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனின் என்ட்ரி லெவல் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி Z ஃபோல்டு 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இதன் மூலம் சாம்சங் நிறுவனம் ஒரே ஆண்டில் இரண்டுக்கும் மேற்பட்ட கேலக்ஸி ஃபோல்டபில் சாதனத்தை அறிமுகம் செய்வது முதல் முறையாக இருக்கும். சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் இறக்குமதி / ஏற்றுமதி டேட்டாபேஸ்-இல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் Z ப்ளிப் 6 மாடல்களுடன் மற்றொரு மாடல் விவரங்களும் இடம்பெற்றுள்ளது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    அதன்படி இரு மாடல்களின் குறியீட்டு பெயர் Q6 மற்றும் B6 என சூட்டப்பட்டுள்ளன. இவற்றுடன் Q6A என்ற குறியீட்டு பெயர் கொண்ட சாதனமும் இடம்பெற்று இருக்கிறது. இது சாம்சங்-இன் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கப்பட்டு வரலாம் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.

    மேலும் இது சாம்சங்கின் முதல் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது. உண்மையில் இத்தகைய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இது பற்றிய தகவல்கள் மட்டும் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    • ஹானர் மேஜிக் V2 தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இதில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யு.ஐ. 6.1 ஒ.எஸ். உள்ளது.

    ஹானர் பிரான்டு ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ச்சியாக புது சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், ஐரோப்பாவில் ஹானர் மேஜிக் V2 மாடல் இணைந்துள்ளது.

    கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலான மேஜிக் V2 தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை ஹானர் மேஜிக் V2 மாடலில் 7.9 இன்ச் OLED, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட மெயின் டிஸ்ப்ளே, 5.45 இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர், 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 50MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யு.ஐ. 6.1 ஒ.எஸ். கொண்டிருக்கிறது. இத்துடன் 4610 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஹானர் மேஜிக் V2 மாடல் பர்பில் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    ஐரோப்பிய சந்தையில் ஹானர் மேஜிக் V2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பர்பில் மற்றும் பிளாக் நிற வேரியன்ட்களின் விலை முறையே 1 ஆயிரத்து 699.99 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 585 மற்றும் 1 ஆயிரத்து 999 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 172 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ×