என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    இணையத்தில் லீக் ஆன விவோ X ஃப்ளிப் டிசைன் - வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    இணையத்தில் லீக் ஆன விவோ X ஃப்ளிப் டிசைன் - வெளியீடு எப்போ தெரியுமா?

    • விவோ நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விவரங்களை டிப்ஸ்டர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார்.
    • புது ஸ்மார்ட்போன் கிளாம்ஷெல் ரக மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்ட மாடல் ஆகும்.

    விவோ நிறுவனம் விரைவில் கிளாம்ஷெல் ரக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் விவோ நிறுவனம் விரைவில் விவோ X ஃப்ளிப் கிளாம்ஷெல் போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இதோடு இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கீமேடிக்-ஐ வெளியிட்டு இருக்கிறது. இதில் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

    இது மட்டுமின்றி புதிய விவோ X ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் படத்தையும் வெளியிட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் ஸ்கீமேடிக் மற்றும் ரெண்டர்களில் விவோ X ஃப்ளிப் மாடலின் பின்புறம் வட்ட வடிவம் கொண்ட கேமரா மாட்யுல், மூன்று கேமரா சென்சார்கள், வலது புறத்தில் மூன்று எல்இடி ஃபிளாஷ், ZEISS லோகோ இடம்பெற்று இருக்கிறது. கேமரா மாட்யுலின் கீழ் செவ்வக வடிவம் கொண்ட கவர் டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போனின் மற்றொரு பாதியில் விவோ லோகோ இடம்பெற்று இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் வால்யும் ராக்கர் மற்றும் பவர் பட்டன் உள்ளது. சிப்செட் தவிர இந்த ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. புதிய விவோ X ஃப்ளிப் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். வரும் நாட்களில் விவோ X ஃப்ளிப் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

    எனினும், சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்பது மர்மமாகவே உள்ளது. இது தவிர விவோ நிறுவனம் விரைவில் விவோ S16e, S16 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவற்றில் எக்சைனோஸ் 1080, ஸ்னாப்டிராகன் 870 மற்றும் டிமென்சிட்டி 8200 சிப்செட்கள் வழங்கப்பட உள்ளன.

    Photo Courtesy: Digital Chat Station

    Next Story
    ×