search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    எதற்கு காத்திருக்கனும்? போல்டபில் ஐபோன் உருவாக்கி அசத்திய வாலிபர்
    X

    எதற்கு காத்திருக்கனும்? போல்டபில் ஐபோன் உருவாக்கி அசத்திய வாலிபர்

    • ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் வெளியிடாதது பற்றி சாம்சங் சமீபத்தில் கேலி விளம்பரம் வெளியிட்டு இருந்தது.
    • ஆப்பிள் நிறுவனத்தின் போல்டபில் ஐபோன் பற்றிய விவரங்கள் பல ஆண்டுகளாக வெளியாகி வந்தன.

    மடிக்கக்கூடிய ஐபோன் வெளியிடவில்லை என்பதை கூறி ஆப்பிள் நிறுவனத்தை கேலி செய்யும் வகையில் சாம்சங் சமீபத்தில் தான் விளம்பரம் வெளியிட்டு இருந்தது. இதற்கு ஆப்பிள் தரப்பில் எந்த விதமான பதிலும் அளிக்கப்படவில்லை. எனினும், சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கி அசத்தி இருக்கிறார்.

    சீனர் உருவாக்கிய போல்டபில் ஐபோன் மாடல் ஐபோன் V என அழைக்கப்படுகிறது. இது ஒரு கிளாம்ஷெல் வகையிலான போல்டபில் போன் ஆகும். மடிக்கக்கூடிய ஐபோன் பற்றிய வீடியோ சீனாவை சேர்ந்த வீடியோ தளமான பிலிபிலியில் வெளியிடப்பட்டு இருக்கிறது. வீடியோவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ஏராளமான பாகங்கள் இடம்பெற்றுள்ளன.

    அதன்படி கேலக்ஸி Z ப்ளிப் மற்றும் மோட்டோ ரேசர் போன்ற மாடல்களில் இருப்பதை போன்று ஐபோனில் உள்ள பாகங்களை இரண்டாக பிரித்து அவற்றை ஒன்றாக இணைத்துள்ளார். போனின் கீழ்புறத்தில் மதர்போர்டு, ரேம், மெமரி போன்ற பாகங்களும், மேல்பாதியில் பேட்டரி, கேமரா சென்சார் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

    நீண்ட கால உழைப்பின் பலனாக இந்த மடிக்கக்கூடிய ஐபோனை சீனர் உருவாக்கி இருக்கிறார். எனினும், ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் ப்ரோடோடைப் நிலையிலேயே இருப்பதாக தெரிகிறது. இவர் உருவாக்கி இருக்கும் போல்டபில் ஐபோனில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், கேமரா மற்றும் இதர அம்சங்கள் உள்ளன. மேலும் இவை அனைத்தும் சீராக இயங்குகின்றன.

    Next Story
    ×