search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    முற்றிலும் புது ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் - வெளியீட்டு தேதி அறிவித்த ஒப்போ!
    X

    முற்றிலும் புது ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் - வெளியீட்டு தேதி அறிவித்த ஒப்போ!

    • ஒப்போ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது.
    • கடந்த ஆண்டு ஒப்போவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக ஃபைண்ட் N அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

    ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் N2 சீரிஸ் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி டிசம்பர் 15 ஆம் தேதி புதிய ஒப்போ ஃபைண்ட் N2 சீரிஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் ஃபைண்ட் N2 மற்றும் ஃபைண்ட் N2 ஃப்ளிப் என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இதில் ஃபைண்ட் N2 மாடல் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    இந்த ஆண்டு ஃபைண்ட் N2 மாடலுடன் தனது முதல் ஃப்ளிப் போனை ஒப்போ அறிமுகம் செய்து இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களை உறுதிப்படுத்தும் வகையில் டீசர் வீடியோவை ஒப்போ வெளியிட்டு உள்ளது. அதன்படி ஒப்போ ஃபைண்ட் N2 மாடலில் டூயல் E6 AMOLED டிஸ்ப்ளே, மடிக்கக்கூடிய ஸ்கிரீன்களில் முற்றிலும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஜீரோ கிரீஸ் கொண்ட ஹின்ஜ் வழங்கப்படுகிறது.

    இத்துடன் மிக குறைந்த எடை கொண்ட கார்பன் ஃபைபர் ஃபிரேம், இண்டகிரேட் மார்டைஸ் மற்றும் டெனான் டிசைன், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. ஃபைண்ட் N2 மாடல் மிக குறைந்த எடை கொண்ட ஃபோல்டபில் போன் என்ற பெருமையை பெறும் என தெரிகிறது.

    இதன் எடை 233 கிராம் ஆகும். ஸ்மார்ட்போனின் பாகங்களை மறு கட்டமைப்பு செய்து, புதுமையான பொருட்களை கொண்டு இந்த நிலையை எட்டியதாக ஒப்போ தெரிவித்து இருக்கிறது. முன்னதாக ஹானர் மேஜிக் Vs மாடல் 261 கிராம் எடையுடன் மிகவும் எடை குறைந்த ஃபோல்டபில் போன் என்ற பெருமையை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×