search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயலி"

    ஸ்டேட்டஸ் ரிப்ளை இன்டிகேட்டர் தவிர, டெஸ்க்டாப்பில் பிஸ்னஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் செயலியைப் பயன்படுத்தும் போது, கவர் புகைப்படத்தை அமைக்கும் திறனை வாட்ஸ்அப் கொண்டு வர உள்ளதாம்.


    வாட்ஸ்அப் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு செயலியாக உருவெடுத்துள்ளது. அத்தகைய வாட்ஸ்அப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் விரைவில் புது அம்சம் ஒன்றை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

     வாட்ஸ்அப்
    Photo Courtesy: WABetaInfo

    வாட்ஸ்அப்பில் நாம் பதிவிடும் ஸ்டேட்டஸ்-க்கு பதில் வரும் போது அதனை பொதுவான மெசேஜ் போல் இன்றி தனியாக பிரித்துக் காட்டும் அம்சத்தை வாட்ஸ்அப் தற்போது உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் இருப்பதாகவும், பீட்டா சோதனையாளர்களுக்குக் கூட இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

    இருப்பினும் இது எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு, ஐ.ஒ.எஸ். மற்றும் டெஸ்க்டாப்பில் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டேட்டஸ் ரிப்ளை இன்டிகேட்டர் தவிர, டெஸ்க்டாப்பில் பிஸ்னஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் செயலியைப் பயன்படுத்தும் போது, கவர் புகைப்படத்தை அமைக்கும் வசதியினை வாட்ஸ்அப் கொண்டு வர உள்ளதாம். 
    வாட்ஸ்அப் பயனர் அக்கவுண்ட் விவரங்களை ஹேக்கர்கள் புது வழிமுறைகளை கொண்டு அபகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
     

    வாட்ஸ்அப் செயலியில் ஏமாற்றப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஹேக்கர்களின் பல்வேகறு புதுப்புது யுக்திகளில் ஏமாறும் பொது மக்கள் தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பறிகொடுக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அந்த வரிசையில் ஹேக்கர்கள் கையாளும் புது வழிமுறை பற்றி பாதுகாப்பு ஆய்வாளர்கள் விளக்கி உள்ளனர். அதன்படி ஒற்றை போன் கால் மூலம் ஹேக்கர்கள் வாட்ஸ்அப் பயனர் அக்கவுண்ட் விவரங்களை அபகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    சைபர் அச்சறுத்துல்கள் பற்றி கணிப்புகளை வெளியிட்டு வரும் கிளவுட்செக் எனும் ஏ.ஐ. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தான் வாட்ஸ்அப் செயலியில் வரும் புது அச்சுறுத்தல் பற்றி தெரிவித்து இருக்கிறார். அதன்படி ஹேக்கர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை எடுத்து பேசுவோர் 67 அல்லது 405 என துவங்கும் எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது, அவர்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட் லாக் அவுட் ஆகி, ஹேக்கர்கள் வசம் சென்று விடும். 

    முதலில் ஹேக்கரிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும் அதன் பின் 67 அல்லது 405 என துவங்கும் பத்து இலக்க எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள ஹேக்கர் தரப்பில் இருந்து வலியுறுத்தப்படும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் அடுத்த சில நிமிடங்களிலேயே வாட்ஸ்அப் அக்கவுண்ட் லாக் அவுட் ஆகி விடும். 

     கோப்புப்படம்

    ஹேக்கர் தரப்பில் பயனர்களுக்கு வழங்கப்படும் மொபைல் எண் ஏர்டெல் மற்றும் ஜியோ சேவையில் கால் பார்வேர்டிங் செய்வதற்கான எண் ஆகும். இன் மூலம் பயனர்களுக்கு வரும் அழைப்புகள் தாங்கள் வழங்கும் மற்றொரு மொபைல் எண்ணிற்கே வரும். வாட்ஸ்அப் சேவையை பதிவு செய்யும் போது, ஓ.டி.பி. ஆப்ஷன் கேட்கப்படும். உங்களின் போன் என்கேஜ்டில் இருந்தால் ஓ.டி.பி. ஹேக்கர்களின் மாற்று மொபைல் எண்ணிற்கே அனுப்பப்படும். இதன் மூலம் தான் ஹேக்கர்கள் பயனர் வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை  பறித்துக் கொள்கின்றனர்.

    பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் இதே போன்ற எண்களையே வைத்து இருப்பதால், இந்த வழிமுறை சர்வதேச அளவில் பயன்படுத்துவதற்கான ஆபத்து அதிகம் தான். இதுபோன்ற பாதிப்புகளில் சிக்காமல் இருக்க தெரியாத நம்பர்களில் இருந்து அழைப்புகளை ஏற்காமல் இருப்பதே நல்லது.
    ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் செயலி இயங்காமல் போகும் என தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த ஐ.ஓ.எஸ். வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும்.


    பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் அடிக்கடி தனது செயலியில் மாற்றங்களை ஏற்படுத்தி, புது அம்சங்கள் வழங்குவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறது. இதே போன்று செயலியில் அவ்வப்போது வழங்கப்படும் புது அம்சங்கள் பழைய ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகும் வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக சீரான இடைவெளியில் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வாட்ஸ்அப் இயங்குவதற்கான சப்போர்ட் நீக்கப்பட்டு வருகிறது. 

    அந்த வரிசையில், ஐ.ஓ.எஸ். 10 மற்றும் ஐ.ஓ.எஸ். 11 கொண்டு இயங்கி வரும் ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5C மாடல்களுக்கான சப்போர்ட் அடுத்த சில மாதங்களில் நிறுத்தப்பட இருக்கிறது. இது பற்றிய தகவலை, வாட்ஸ்அப் அப்டேட் குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் wabetainfo தளம் வெளியிட்டு உள்ளது. 

    வாட்ஸ்அப்
    Photo Courtesy: WABetaInfo

    அந்த வலைதள தகவல்களின்படி ஐ.ஓ.எஸ். 10 மற்றும் ஐ.ஓ.எஸ். 11 கொண்ட ஐபோன்களில் வாட்ஸ்அப் சேவை அக்டோபர் 24, 2022 முதல் நிறுத்தப்பட்டு விடும் என ஸ்கிரீன்ஷாட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது பற்றிய தகவல் வாட்ஸ்அப் ஹெல்ப் செண்டர் வலைதள பக்கத்திலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

    அதன் படி, வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த ஐ.ஓ.எஸ். 12 மற்றும் அதன் பின் வெளியிடப்பட்ட வெர்ஷன்கள் சிறப்பானது, இதனை பிரந்துரைக்கிறோம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் ஐபோன் 5S, ஐபோன் 6 அல்லது ஐபோன் 6S போன்ற மாடல்களில் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த ஐ.ஓ.எஸ். 12 தளத்திற்கு அப்டேட் செய்வது அவசியமாகி இருக்கிறது. 
    ×