என் மலர்
தொழில்நுட்பம்

இரண்டு அளவுகளில் ஆப்பிள் ஐபேட் இந்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல்
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டிற்குள் இரண்டு புதிய ஐபேட் மாடல்களை இருவித அளவுகளில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPad
ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்களை இருவித வேரியண்ட்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை 10.2 இன்ச் மற்றும் 10.5 இன்ச் என இருவித அளவுகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய 10.2 இன்ச் ஐபேட் தற்சமயம் விற்பனை செய்யப்படும் 9.7 இன்ச் மாடலுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய ஐபேட் ஆப்பிள் நிறுவனத்தின் ஏழாவது தலைமுறை மாடலாக என்றும் கூறப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனம் 10.5 இன்ச் அளவில் மற்றொரு ஐபேட் மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக ததகவல் வெளியாகியுள்ளது.

இருவித அளவுகளில் உருவாகி வருவதாக கூறப்படும் புதிய ஐபேட்கள் தனித்தனியே அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், ஸ்கிரீன் அளவுகளை தவிர புதிய ஐபேட்களை ஆப்பிள் எவ்வாறு வித்தியாசப்படுத்தும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிளின் ஏழாம் தலைமுறை ஐபேட்களில் டச் ஐ.டி. மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. டச் ஐ.டி. வழங்கப்படுவதால், ஆப்பிள் தனது ஐபேட் மாடலில் ஃபேஸ் ஐ.டி. அம்சத்தை வழங்காது என உறுதியாகியிருக்கிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய ஐபேட் அளவுகள் பற்றி எவ்வத விவரமும் வெளியாகவில்லை. இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலத்திற்குள் ஆப்பிள் இரண்டு ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Next Story






