என் மலர்
இந்தியா

இந்திய மாணவர்களுக்கு குட் நியூஸ்! - அமெரிக்காவை விடுங்க.. ஐரோப்பாவில் படித்து பணிபுரிய வாய்ப்பு!
- இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
- ஐரோப்பிய நாடுகளில் இந்திய மாணவர்களுக்கு வேலை தேட விசா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.
இந்நிலையில், இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் எதிரொலியாக ஐரோப்பிய நாடுகளில் படிப்பை முடிக்கும் இந்திய மாணவர்கள், அங்கேயே தங்கி வேலை தேட 9 மாதங்கள் கால அவகாசம் (POST-STUDY VISA) இனி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளை பயின்ற மருத்துவர்கள், செவிலியர்களின் பட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிப்பதால், அவர்கள் அங்கு சென்று பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
Next Story







