search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ruby manoharan MLA"

    • நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பா.ஜ.க. அரசு அம்பானி, அதானி என்பவர்களை பற்றி மட்டுமே யோசிக்கிறது என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    நெல்லை:

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் நடை பெற்று ஓராண்டு நிறை வானதையொட்டி நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதன்பின் களக்காடு காந்தி சிலை அருகே பொதுக்கூட்டம் நடை பெற்றது. அதில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    ராகுல் காந்தி ஒரு ராஜகுமாரன் அவருக்கு எந்த குறையுமே இல்லை. எல்லா வசதிகளும் உள்ளது. அப்படிப்பட்ட அவர் இந்திய மக்களுக்காக அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுத்ததற்காகவும், பாராளு மன்றத்தில் அதானிக்கும், மோடிக்கும் என்ன உறவு என்று கேள்வி கேட்டதற்காகவும் அவருடைய எம்.பி. பதவியை பறித்து வீட்டை காலி பண்ண சொன்னார்கள். அப்படி இருந்தும் அந்த சோதனைகள் எல்லாம் தாண்டி மீண்டும் ராகுல் காந்தி எம்.பி. ஆனார். அத்தகைய தலைவர் நமக்காக கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். அதை நினைவு கூறும் வகையில் இன்று நாமும் நடந்தோம்.

    மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசு ஏழை எளிய மக்களை பற்றி யோசிக்காமல் அம்பானி, அதானி என்பவர்களை பற்றி மட்டுமே யோசிக்கிறது. மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தான் இந்தியா பின்னோக்கி செல்கிறது. மக்கள் விலைவாசி உயர்வாலும், வேலை இல்லாமலும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    இதையெல்லாம் பார்த்துதான் ராகுல் காந்தி மக்களின் நலனுக்காக ஒரு இந்திய ஒற்றுமை நடை பயணத்தை செய்தார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்திய கூட்டணியை அமைக்க காரணமானார். பரம்பரை பணக்காரரான ராகுல் காந்தி இந்திய மக்களின் நலனுக்காக கஷ்டப்படுகிறார். அவர் எப்போதும் பதவிக்காக ஆசைப்பட்டதில்லை.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி என்பது இந்தியாவிலேயே மிகப்பெரிய பதவி ஆகும் அதையே அவர் ராஜினாமா செய்தார். அதன் பிறகு கூட அவர் ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்காக தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

    பணக்காரர் பணக்காரர் ஆகி கொண்டே செல்கிறார்கள். ஏழை எளிய மக்கள் இன்னும் ஏழ்மையிலே இருக்கிறார்கள். சாதியாலும், மதத்தாலும், மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்துகிறார்கள். இதை யெல்லாம் மாற்ற நினைத்த ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் மூலம் அனைத்து மக்களையும், அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து காட்டினார். அவர் முயற்சியால் ஒன்றிணைந்த கூட்டணி கட்சி தான் இந்தியா.

    இந்தியா கூட்டணி கட்சி பார்த்ததும் மோடிக்கு பயம் வந்துவிட்டது. எனவே தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று மக்களை குழப்பம் முயற்சியில் இறங்கியுள்ளார். அவர் என்ன முயற்சி செய்தாலும் ராகுல் காந்தி பிரதமராக வருவது உறுதி. நான் பல மாநிலங்களுக்கு பயணம் செய்து வருகிறேன். அங்கே எல்லாம் மக்களின் நிலைமை பின்னோக்கி செல்லுகிறது. தேர்தலில் மக்களுக்கு அவர்கள் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

    ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்ப மாகிவிட்டது. தமிழகத்தில் ஒரு நல்ல முதல்-அமைச்சர் கிடைத்ததால் நம் மாநிலம் மட்டும் தப்பித்து விட்டது. பெருந்தலைவர் காமராஜர் என்ன திட்டங்களை மக்களின் நலனுக்காக கொண்டு வந்தாரோ அதை பின்பற்றியே பல திட்டங்களை நம்முடைய முதல்-அமைச்சர் மக்களின் நலனுக்காக கொண்டு வந்து கொண்டி ருக்கிறார். வரப்போகும் தேர்தலில் கண்டிப்பாக பா.ஜ.க. அரசு பெரிய தோல்வியை சந்திக்கும். வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறும். கண்டிப்பாக ராகுல் காந்தி பிரதமராக வருவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வட்டார, நகரங்களில் உள்ள சுமார் 1500 - க்கும் மேற்பட்ட காங்கிரசார் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் காமராஜ், மாநில விவசாய அணி செயலாளர் விவேக் முருகன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் வினோத், மாவட்ட துணைத் தலைவர் சந்திரசேகர், செல்லப்பாண்டி, ராஜகோபால் மாவட்ட பொதுச் செயலா ளர்கள் நம்பிதுரை, காமராஜ், மலையடிப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், களக்காடு நகரத் தலைவர் ஜார்ஜ் வில்சன், வட்டார தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்ட மன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று மருதகுளம் ரோசலிண்ட் செல்லையா அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் கடந்த 2022-2023-ம் ஆண்டு வெளிவந்த பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    அதன்பின் தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்களை 120 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத் தலைவர் செல்லப் பாண்டி, நாங்குநேரி வடக்கு வட்டார தலைவர் அம்பு ரோஸ், பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், தோட் டாக்குடி ஊராட்சி மன்றம் மேரி ஜெபன்சி, தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ராஜா, முன்னாள் மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, ஜெயக்குமார், ஜாண்சன், காங்கிரஸ் ஊடகத்துறை ஆறுமுகராஜ், ராஜ், முருகன், ராபர்ட் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • வசந்தகுமாரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி பாளை மகாராஜ நகரில் உள்ள நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • வசந்தகுமாரின் படத்திற்கு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி பாளை மகாராஜ நகரில் உள்ள நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., வசந்தகுமாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி பொறுப் பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, மாவட்ட இணை செயலாளர் ராம நாதன், கிராம கமிட்டி தலைவர் அப்பாதுரை மற்றும் காங்கிரஸ் நிர்வா கிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    • நாங்குனேரி ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
    • பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாள் இன்று நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, பாளை காமராஜ் நகரில் அமைந்துள்ள உதவும் கரங்கள், வள்ளலார் குழந்தைகள் இல்லத்தில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு, முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டது. இதில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காமராஜ், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத் தலைவர்கள் செல்லப்பாண்டி, ராஜகோ பால், பாளை. வட்டார தலைவர்கள் கனகராஜ், கணேசன், நளன், மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோ ரிந்தாள், மகிளா காங்கிரஸ் மாநில இணைச்செயலாளர் கமலா, நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் வினோத் போத்திராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

    சிறப்பு பூஜை

    தொடர்ந்து, மகாராஜா நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றிய நாங்குனேரி ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதையடுத்து, நாங்குநேரி பெரும்பத்து விலக்கு பகுதியிலும் காங்கிரஸ் கொடி ஏற்றிவைத்து, அங்கு வந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

    தொடர்ந்து, பிரசித்தி பெற்ற திருக்குறுங்குடி அழகிய நம்பிராயார் கோவிலில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டி நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டில் நாங்குனேரி ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்ட அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாநில செயலாளர் ஜோதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் காமராஜ், மாவட்ட துணை தலைவர்கள் செல்லப்பாண்டி, ராஜகோபால், சந்திரசேகர், மாவட்ட பொதுச்செயலாளர் நம்பிதுரை, கக்கன், மாவட்ட கவுன்சிலர் தனிதங்கம், நாங்குநேரி, களக்காடு, பாளை வட்டார தலைவர்கள் கனகராஜ், கணேசன், நளன், சங்கரபாண்டி, அலெக்ஸ், காளப்பெருமாள், வாகை துரை, ராமஜெயம், வட்டார பொறுப்பாளர் பால்பாண்டி, பானு, காங்கிரஸ் நகரத் தலைவர்கள் ராசாத்தி அம்மாள், ஜார்ஜ் வில்சன், முத்துகிருஷ்ணன், ரீமாபைசல், மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தாள், மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கமலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டேனியல், முன்னாள் நெல்லை பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் வினோத் போத்திராஜ், ஏர்வாடி நகர செயலாளர் ஆபிரகாம், நாங்குநேரி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சித்திரைவேல், பிலியன்ஸ், வின்சென்ட், அன்வர், வெள்ளைசாமி, ஆனந்தராஜன், ராமநாதன், முத்துராமலிங்கம், ஜெயசீலன், இளங்கோ, தங்கம், சதாசிவம், அருண், லட்சுமண், ராஜன், சுயம்பு, கவுன்சிலர் வனிதா காமராஜ், மீகா, மரியசாந்தி, மகளிர் அணி தலைவிகள் வசந்தா லதா, பாலம்மாள், ஸ்ரீதேவி, பிரியா, விமலா, தங்கலெட்சுமி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
    • ஆர்பாட்டத்தில் மத்திய அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே உள்ள பஸ்நிறுத்தத்தில் நடைபெற்றது.

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தலைமை தாங்கினார்.

    இதில் மாநில பொதுச் செயலாளர்கள், மகிளா காங்கிரஸ் பொதுச்செய லாளர்கள், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வட்டார தலைவர்கள்,நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கிராம காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள்,மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள்,காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்பாட்டத்தில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ,பொது நிறுவனங்களின் சொத்துக்களை பெரும் முதலாளிகளுக்கு மத்திய அரசு தாரை வார்த்ததாக கூறி கோஷங்கள் எழுப்பி னர்.

    நிகழ்ச்சியில் பாளை வடக்கு வட்டார பகுதி களை சேர்ந்த மாற்று கட்சி இளைஞர்கள் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.அவர்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வரவேற்றார்.

    • அதானி குழும விவகாரம் தொடர்பாக பராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
    • ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் கிருஷ்ணாபுரம் ஆர்ச் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    நெல்லை:

    அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்தது, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் கடன் வழங்கியது தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்தும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை வட்டாரத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஆர்ச் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு காங்கி ரஸ் கமிட்டி மாநில பொரு ளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசி னார். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, வட்டார, நகர பேரூராட்சி, பஞ்சாயத்து வார்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • நடந்த உண்மைகளை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெளிவாக பதில் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
    • தொண்டர்களை தாக்கிய கே.எஸ்.அழகிரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    நெல்லை:

    அம்பை வட்டார முன்னாள் காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தன் பதவி போய்விடும் என்று பதறி தொண்டர்களை அடித்தது வீடியோக்கள் மூலம் ஆதாரத்துடன் தெரிகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மாவட்ட தலைவர் அனைவரையும் கூட்டம் போட்டு தன்னை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து இதற்கு யார் மீதாவது பழி போட வேண்டும் என்று கருதி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மீது பழி சுமத்தி உள்ளார்.

    நடந்த உண்மைகளை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெரு ந்தகை எம்.எல்.ஏ. தெளிவாக பதில் அளித்துள்ளார். ஒவ்வொரு வட்டாரத் தலைவர்களும் தங்களை தாக்கியது கே.எஸ்.அழகிரி தான் என்று ஆதாரத்துடன் கூறி உள்ளார்கள். எந்தெந்த தொகுதியில் பிரச்சனைகள் இருக்கிறதோ அந்த தொகுதி எம்.எல்.ஏ.விடம் கூறுவார்கள். ஆனால் ரூபி மனோகரன் 5 நாட்களாகவே நாங்குநேரி–யில் இல்லை, சென்னையில் இருந்தார்.

    அம்பை வட்டாரத்தில் இருந்து நான் 50 காங்கிரஸ் தொண்டர்களை அழைத்து சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றேன். ரூபி மனோகரன் தான் காரணம் என்றால் எனது தொகுதி எம்.எல்.ஏ. அவர் இல்லை. பிறகு எப்படி அவர் காரணமாவார்.

    தொண்டர்களை தாக்கிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
    • சிந்தாமணி பஞ்சாயத்து கீழ சிந்தாமணியில் இளைஞர்களுக்கு கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்பு போன்ற உபகரணங்களை வழங்கினார்.

    நெல்லை:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

    இதன் ஒருபகுதியாகவும், நெல்லை சந்திப்பு பழைய பஸ்நிலையத்தை ஸ்மாட்சிட்டி திட்டத்தின் மூலம் புதுப்பிக்கும் போது கிடைத்த ஏராளமான ஆற்று மணலை கொள்ளையடித்த மாநகராட்சி அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யவும், சி.பி.சி.ஐ.டி. விசாரணையை விரைவு படுத்தக்கோரியும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலை மூலைக்கரைப்பட்டி பஸ்நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தலைமை தாங்கினார்.

    கோஷங்கள்

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாநில விவசாய பிரிவு செயலாளர் விவேக் முருகன் மற்றும் வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    உடற்பயிற்சி உபகரணங்கள்

    பாளையங்கோட்டை யூனியன் சீவலப்பேரி பஞ்சா யத்து பொட்டல்நகரில் இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பார், சிங்கள் பார் போன்ற உபகரணங்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் வழங்கினார்.

    மேலும் சிந்தாமணி பஞ்சாயத்து கீழ சிந்தாமணியில் இளைஞர்களுக்கு கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்பு போன்ற உபகரணங்களை வழங்கினார்.

    மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் செல்லப்பாண்டி, வட்டார தலைவர்கள் சங்கரபாண்டியன், நளன், ரவீந்திரன், மாவட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகி சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர் மரிய பில்லியன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×