3-ம் ஆண்டு நினைவு நாள்- வசந்தகுமார் படத்திற்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மரியாதை

வசந்தகுமாரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி பாளை மகாராஜ நகரில் உள்ள நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. வசந்தகுமாரின் படத்திற்கு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முன்னாள் எம்.பி. வசந்தகுமார் படத்திற்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.
முன்னாள் எம்.பி. வசந்தகுமார் படத்திற்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.
Published on

நெல்லை:

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 3-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி பாளை மகாராஜ நகரில் உள்ள நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., வசந்தகுமாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி பொறுப் பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, மாவட்ட இணை செயலாளர் ராம நாதன், கிராம கமிட்டி தலைவர் அப்பாதுரை மற்றும் காங்கிரஸ் நிர்வா கிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com