அதானி குழும விவகாரம்: ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்

அதானி குழும விவகாரம் தொடர்பாக பராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் கிருஷ்ணாபுரம் ஆர்ச் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

நெல்லை:

அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்தது, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் கடன் வழங்கியது தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்தும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை வட்டாரத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஆர்ச் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு காங்கி ரஸ் கமிட்டி மாநில பொரு ளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசி னார். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, வட்டார, நகர பேரூராட்சி, பஞ்சாயத்து வார்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com