என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி படுகாயம்
  X

  மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சண்முகம் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
  • திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

  திருவோணம்:

  தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே பில்லு வெட்டி விடுதிவிடுதி மூவர் ரோட்டில் வசித்து வருபவர் கூலி விவசாயி சண்முகம் (வயது 46).

  இவர் சம்பவத்தன்று விவசாய பணியை முடித்துவிட்டு திருவோணம் மூவர் ரோடு பகுதியில் சின்னங்கோன்விடுதி செல்லும் சாலை அருகே காய்கறி வாங்கிக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.

  அப்போது கந்தர்வகோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி பட்டுக்கோட்டை பாக்கியம் நகரை சேர்ந்த வீரபாண்டி (வயது 27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சண்முகம் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.

  உடனே அக்கம் பக்கத்தினர் சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இது குறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×