மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்ததில் தந்தை பலி; மகன் படுகாயம்

மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்ததில் தந்தை பலி, மகன் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளையும், பலியான அய்யனாரையும் காணலாம்.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளையும், பலியான அய்யனாரையும் காணலாம்.
Published on

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள தென்பழஞ்சியை சேர்ந்தவர் அய்யனார் (வயது60). இவரது மகன் அழகுராஜா (25).

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தந்தையும், மகனும் காலையில் கறி எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். தென்பழஞ்சி கண்மாய் அருகே வந்தபோது சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இதில் அய்யனார் படுகாயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழி யில் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த அழகு பாண்டி காமராஜர் பல்கலைக்கழக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com