பரமத்தி வேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கட்டிட மேஸ்திரி பலி

நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு செல்வதற்காக, வேலூரில் இருந்து கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அதிவேகமாக வந்த கார், பெரியசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
பரமத்தி வேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார்  மோதி கட்டிட மேஸ்திரி பலி
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி தண்ணீர் பந்தல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 70). கட்டிட மேஸ்திரி.

இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு செல்வதற்காக, வேலூரில் இருந்து கரூர்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

தாலுகா அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, நாமக்கலில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக வந்த கார், பெரியசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், அங்கு வந்த பரமத்திவேலூர் போலீசார், விபத்தில் பலியான பெரியசாமியின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து, காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com