search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Art Competition"

    • 3 மையங்களில் நடைபெற்றது
    • 315 பேர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் செயல் முறைகளின் படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைப்பண்பாட்டு திருவிழா போட்டிகள் 3 மையங்களில் நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதியுதவி ,தனியார் பள்ளிகளை சேர்ந்த 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறைகளிடம் தெரிவிக்கவும் வாய்ப்பாட்டு இசை, கருவிஇசை, நடனம், நாடகம் , காட்சிக்கலை, ஓவியம் எனும் தலைப்புகளில் மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

    இந்த கலைப்பண்பாட்டு திருவிழாவில் மாணவர்கள் ஓவியம், பாடல், நடனம், களிமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு பொம்மை, விலங்கு, சாமி போன்ற உருவங்கள் என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    இந்த போட்டியில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் 315 பேர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் 20 மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.

    இதில் தலைமை ஆசிரியர்களும், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களும் போட்டிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்திருந்தனர்.

    • 6-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பேச்சு, நடனம் மற்றும் பாடல் போட்டிகளில் தங்களது திறமையை நிரூபித்தனர்.
    • வெற்றி பெற்றவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    பெருமாநல்லூர் : 

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற இருக்கும் கலைப் போட்டியில் பங்கேற்க பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்தினர் இதில் 6-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பேச்சு, நடனம் மற்றும் பாடல் போட்டிகளில் தங்களது திறமையை நிரூபித்தனர்.

    இதில் வெற்றி பெற்றவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.இந்த தகவலை பள்ளியின் தலைமை ஆசிரியை பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

    • மாநில கலாச்சார கலைப் போட்டியில் கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் 2-ம் இடம் பெற்றனர்.
    • சிவகாசியில் நடந்த மாநில கலாச்சாரக் கலை போட்டியில் பங்குபெற்று ஒட்டு மொத்த ரன்னர் கோப்பையை பெற்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை கழகத்தில் படிக்கும் 31 மாணவர்கள், சிவகாசியில் நடந்த மாநில கலாச்சாரக் கலை போட்டியில் பங்குபெற்று ஒட்டு மொத்த ரன்னர் கோப்பையை பெற்றனர். கிராபிக்ஸ், வார்த்தை விளையாட்டு போட்டிகளில் முதல் இடமும், புதையல் வேட்டை, ஆர்க்கெஸ்ட்ரா, குரூப் நடனம், புது ஜடியா அறிமுகம் போட்டிகளில் 2-வது இடமும் பெற்றனர்.

    பல்கலை வேந்தர் கே.ஸ்ரீதரன், இணை வேந்தர் அறிவழகிஸ்ரீதரன், துணைத்தலைவர் எஸ்.சசி ஆனந்த் , பதிவாளர் வாசுதேவன், டீன் முத்துக்கண்ணன், கபிலன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

    • தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் குரலிசை கருவி, இசை, பரதநாட்டியம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ. 6000-ம், இரண்டாம் பரிசு ரூ.4500-ம், மூன்றாம் பரிசு ரூ. 3500-க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் குரலிசை கருவி, இசை, பரதநாட்டியம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

    இப்போட்டியில் 105 பேர் கலந்து கொண்டனர். குரலிசை போட்டியில் சங்கீதப்பிரியா முதலிடம் பிடித்தார். இரண்டாமிடம் கமிர்லானி, மூன்றாமிடம் ஜெயஸ்ரீதேவியும் பிடித்தனர். இதேப்பபோல் பரதநாட்டியம் போட்டியில் முதலிடம் லக்சா சிவகுமார், இரண்டாமிடம் தேவிபிரியா, மூன்றாமிடம் ஜான்சிபெசியா, கருவியிசை போட்டியில் முதலிடம் சிவச்சந்திரன், இரண்டாமிடம் கீர்த்தனா, மூன்றாமிடம் ச இந்திரஜித், கிராமிய நடனம் போட்டியில் முதலிடம் மோசஸ் , இரண்டாமிடம்நாகார்ஜுன், மூன்றாமிடம் விஷாலிபிரியா, ஓவிய போட்டியில் முதலிடம்அபினேஷ், இரண்டாமிடம்அல்காலிக், மூன்றாமிடம் மனோஜ் ஆகியோர் பெற்றனர்.

    இந்த 15 வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ. 6000-ம், இரண்டாம் பரிசு ரூ.4500-ம், மூன்றாம் பரிசு ரூ. 3500-க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மண்டலக் கலை பண்பாட்டு மையம் உதவி இயக்குனர் நீலமேகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×