கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் 2-ம் இடம்

மாநில கலாச்சார கலைப் போட்டியில் கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் 2-ம் இடம் பெற்றனர்.சிவகாசியில் நடந்த மாநில கலாச்சாரக் கலை போட்டியில் பங்குபெற்று ஒட்டு மொத்த ரன்னர் கோப்பையை பெற்றனர்.
கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் 2-ம் இடம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை கழகத்தில் படிக்கும் 31 மாணவர்கள், சிவகாசியில் நடந்த மாநில கலாச்சாரக் கலை போட்டியில் பங்குபெற்று ஒட்டு மொத்த ரன்னர் கோப்பையை பெற்றனர். கிராபிக்ஸ், வார்த்தை விளையாட்டு போட்டிகளில் முதல் இடமும், புதையல் வேட்டை, ஆர்க்கெஸ்ட்ரா, குரூப் நடனம், புது ஜடியா அறிமுகம் போட்டிகளில் 2-வது இடமும் பெற்றனர்.

பல்கலை வேந்தர் கே.ஸ்ரீதரன், இணை வேந்தர் அறிவழகிஸ்ரீதரன், துணைத்தலைவர் எஸ்.சசி ஆனந்த் , பதிவாளர் வாசுதேவன், டீன் முத்துக்கண்ணன், கபிலன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com