மாணவர்களுக்கான கலைப்பண்பாட்டு போட்டிகள்

3 மையங்களில் நடைபெற்றது315 பேர் கலந்து கொண்டனர்
மாணவர்களுக்கான கலைப்பண்பாட்டு போட்டிகள்
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் செயல் முறைகளின் படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைப்பண்பாட்டு திருவிழா போட்டிகள் 3 மையங்களில் நடைபெற்றது.

இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதியுதவி ,தனியார் பள்ளிகளை சேர்ந்த 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறைகளிடம் தெரிவிக்கவும் வாய்ப்பாட்டு இசை, கருவிஇசை, நடனம், நாடகம் , காட்சிக்கலை, ஓவியம் எனும் தலைப்புகளில் மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

இந்த கலைப்பண்பாட்டு திருவிழாவில் மாணவர்கள் ஓவியம், பாடல், நடனம், களிமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு பொம்மை, விலங்கு, சாமி போன்ற உருவங்கள் என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த போட்டியில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் 315 பேர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் 20 மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.

இதில் தலைமை ஆசிரியர்களும், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களும் போட்டிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com