என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலைப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு - கலெக்டர் வழங்கினார்
- தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் குரலிசை கருவி, இசை, பரதநாட்டியம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ. 6000-ம், இரண்டாம் பரிசு ரூ.4500-ம், மூன்றாம் பரிசு ரூ. 3500-க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் குரலிசை கருவி, இசை, பரதநாட்டியம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டியில் 105 பேர் கலந்து கொண்டனர். குரலிசை போட்டியில் சங்கீதப்பிரியா முதலிடம் பிடித்தார். இரண்டாமிடம் கமிர்லானி, மூன்றாமிடம் ஜெயஸ்ரீதேவியும் பிடித்தனர். இதேப்பபோல் பரதநாட்டியம் போட்டியில் முதலிடம் லக்சா சிவகுமார், இரண்டாமிடம் தேவிபிரியா, மூன்றாமிடம் ஜான்சிபெசியா, கருவியிசை போட்டியில் முதலிடம் சிவச்சந்திரன், இரண்டாமிடம் கீர்த்தனா, மூன்றாமிடம் ச இந்திரஜித், கிராமிய நடனம் போட்டியில் முதலிடம் மோசஸ் , இரண்டாமிடம்நாகார்ஜுன், மூன்றாமிடம் விஷாலிபிரியா, ஓவிய போட்டியில் முதலிடம்அபினேஷ், இரண்டாமிடம்அல்காலிக், மூன்றாமிடம் மனோஜ் ஆகியோர் பெற்றனர்.
இந்த 15 வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ. 6000-ம், இரண்டாம் பரிசு ரூ.4500-ம், மூன்றாம் பரிசு ரூ. 3500-க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மண்டலக் கலை பண்பாட்டு மையம் உதவி இயக்குனர் நீலமேகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






