என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருவள்ளூர் மாவட்ட கலைப்போட்டியில் கண்ணப்பசாமி நகர் அரசு பள்ளி மாணவிகள் சாதனை
  X

  திருவள்ளூர் மாவட்ட கலைப்போட்டியில் கண்ணப்பசாமி நகர் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
  • மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மதுரை மற்றும் கோவையில் மாநில அளவிலான கலைப்போட்டியில் பங்கேற்கின்றனர்.

  சென்னை:

  தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைப்போட்டிகளை பள்ளி கல்வித்துறை நடத்தியது. 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு என 3 பிரிவுகளில் இந்த போட்டி நடைபெற்றது.

  ஓவியப்போட்டி (நுண்கலை), இசைப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி, நாடகப்போட்டி, மொழித்திறனுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி என்று 6 வகையான கலைப்போட்டிகள் நடைபெற்றன.

  இதில் திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் புழல் அருகே உள்ள கண்ணப்பசாமி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

  6 முதல் 8-ம் வகுப்பு வரை நடந்த தனிநபர் நடிப்பு பிரிவில் 6-ம் வகுப்பு மாணவன் அப்துல் பாரிஸ், குழுப்பாடல் போட்டியில் மனிதநேய பாடல் தலைப்பில் சனுஷ்டிக்கா குழுவினர் முதல் பரிசு பெற்றனர். இதேபோல் 9 மற்றும் 10-ம் வகுப்பு பிரிவில் மேற்கத்திய நடனப் போட்டியில் வர்ஷினி குழுவினர் முதல் பரிசை வென்றனர். போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

  மாவட்ட அளவில் வெற்றி பெற்ற இவர்கள் மதுரை மற்றும் கோவையில் வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான கலைப்போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

  Next Story
  ×